பலமுறை எச்சரித்தோம்... ஏவுகணை தாக்குதல் குறித்து ஈரான் விளக்கம்
ஈரானுக்கு எதிராக தாக்குதல்களை நடத்துவதற்கு அதன் பிரதேசத்தை மூன்றாம் தரப்பினர் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்று ஈரான் பலமுறை ஈராக் அதிகாரிகளை எச்சரித்துள்ளது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் Saeed Khatibzadeh தெரிவித்துள்ளார்
தன்னாட்சி ஈராக் குர்திஷ் பிராந்தியத்தின் தலைநகர் Erbil மீது நேற்று சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.இத்தாக்குதலுக்கு ஈரான் பொறுப்பேற்றது.
சிரியாவில் ஈரானிய ராணுவ வீரர்களைக் கொன்ற சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, Erbil-ல் IRGC படைகள் தாக்குதல் நடத்தியதாக ஈரானிய அரசு ஊடகம் கூறியது.
இந்நிலையில் இன்று உரையாற்றிய ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் Saeed Khatibzadeh, ஈரான் மீதான மூன்றாம் நாடுகளின் தாக்குதல்களுக்கு அதன் பிரதேசம் ஒரு தளமாக பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் பொறுப்பு ஈராக் மத்திய அரசுக்கு உள்ளது.
கடந்த காலங்களில், ஈராக்கின் பிரதேசம் குர்திஷ் போராளிகள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற மூன்றாம் தரப்பினரால் ஈரானுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது என கூறினார்.
இந்நிலையில், Erbil மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல், பொதுமக்களின் குடியிருப்புப் பகுதிகளை மட்டுமே குறிவைத்து நடத்தப்பட்டதாக ஈராக் குர்திஷ் பிராந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.