டெல் அவிவ் நகரில் நடந்த வன்முறை: சந்தேக நபரை சுட்டு தடுத்து நிறுத்திய வழிபோக்கர்
டெல் அவிவ் நகரில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
டெல் அவிவ் தாக்குதல்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி நிலையை அடைந்துள்ள நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ்-வில் பயங்கர வன்முறை சம்பவம் அரங்கேறியுள்ளது.
டெல் அவிவ் நகரின் மையப்பகுதியில் மர்ம நபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
ஆபத்தான நிலையில் சந்தேக நபர்
இஸ்ரேலிய பொலிஸார் வழங்கிய தகவலில், வழிப்போக்கர் ஒருவர் சந்தேக நபரை சுட்டு தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
பின் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நபர், தற்போது ஆபத்தான உடல் நிலையுடன் இருப்பதாக கூறப்படுகிறது.
அதிகாரிகள் சந்தேக நபரின் அடையாளத்தை வெளியிடவில்லை என்றாலும், இந்த சம்பவத்தை பயங்கரவாதச் செயல் என சந்தேகித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |