சூனியம் செய்ததாக கூறி கணவன், மனைவியை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய பொதுமக்கள்! அதிர்ச்சி சம்பவம்
தெலுங்கானாவில் சூனியம் செய்ததாக கூறி கணவன், மனைவியை மரத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணவன், மனைவியை தாக்கிய பொதுமக்கள்
இந்தியாவில் உள்ள தெலுங்கானாவைச் சேர்ந்தவர் யாதையா. இவருடைய மனைவி ஷியாமம்மா. இத்தம்பதிகள் சூனியம் செய்ததாக கூறி கிராம மக்கள் சிலர் இவர்களது வீட்டிற்குள் நுழைந்து கணவன், மனைவியை இழுத்து வந்தனர்.
இதனையடுத்து, மரத்தில் கட்டி பொதுமக்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். உடனே இது குறித்து பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் அவர்கள் இருவரையும் மீட்டனர்.
வீடியோ வைரல்
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பொலிசார் இவர்களை தாக்கிய நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் தாக்கியதில் இவர்கள் இருவருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
#Horrific Terrible incident happened in Telangana, A Dalit husband and wife were severely thrashed and then hanged from a tree in Telangana's Sangareddy district after being accused of practising witchcraft. pic.twitter.com/RI2TRrL8jt
— The Dalit Voice (@ambedkariteIND) June 19, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |