காதலித்த 2 பெண்களுடன் ஒரே மேடையில் திருமணம்: மூன்று வருட காதலில் 2 குழந்தைகள்
இந்தியாவின் தெலுங்கானாவில் மூன்று வருடங்களாக காதலித்து வந்த இரண்டு பெண்களை ஒரே மேடையில் சதிபாபு என்ற இளைஞர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
3 வருட காதல்
தெலுங்கானா மாநிலத்தின் கொத்தகுடெம் மாவட்டம், எர்ரபோரு கிராமத்தை சேர்ந்த மதிவி சதிபாபு (Madivi Sathibabu) என்ற வாலிபர், இடைநிலை படிக்கும் போது தோசிலப்பள்ளியை சேர்ந்த சோடி ஸ்வப்னா குமாரி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
அதே சமயம் மண்டல் பகுதியில் (mandal) உள்ள குர்னாபள்ளியை சேர்ந்த தனது மைத்துனர் இர்பா சுனிதா என்ற பெண்ணையும் சதிபாபு காதலித்து வந்துள்ளார்.
twitter
இதற்கிடையில் கடந்த மூன்று ஆண்டுகளாக தனது இரண்டு காதலிகளுடனும் சதிபாபு வாழ்ந்த வந்த நிலையில், ஸ்வப்னாவுக்கு ஒரு மகளும், சுனிதாவுக்கு ஒரு மகனும் பிறந்துள்ளனர்.
இதையடுத்து பெண்களின் பெற்றோர் தங்கள் மகள்களை திருமணம் செய்து கொள்ளுமாறு சதிபாபுவை வற்புறுத்தியுள்ளனர், சதிபாபு-வும் இறுதியாக திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
ஒரே மேடையில் 2 பெண்களுடன் திருமணம்
சமீபத்தில் நடைபெற்ற பஞ்சாயத்தில், மூன்று ஊர் பெரியவர்கள் முன்னிலையில் இரு பெண்களையும் அவரை திருமணம் செய்து கொள்ள சதிபாபு சம்மதித்தார்.
இதையடுத்து அவர்களுக்கு வியாழக்கிழமை (மார்ச் 9) காலை 7 மணிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
twitter
ஆனால் இந்த திருமணம் தேவையற்ற கவனத்தை ஈர்த்ததால் ஊர் பெரியவர்கள் திருமண விழாவை புதன்கிழமை இரவே நடத்தி முடித்துள்ளனர்.
கிராமத்திற்குள் ஊடகங்கள் அனுமதிக்கப்படாத நிலையில், திருமணம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.