சட்டமன்றத்தில் கண் கலங்கிய சபாநாயகர் - தாய் குறித்து இழிவாக பேசிய 2 MLC கைது
telangana speaker cries in assembly over mla remark on his mother: சட்டமேலவை உறுப்பினர்கள் தனது தாய் குறித்த இழிவான பேச்சுக்கு தெலுங்கானா சட்டமன்றத்தில் சபாநாயகர் கண் கலங்கியுள்ளார். இது தொடர்பான புகாரில் 2 MLC கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டமன்றத்தில் கண் கலங்கிய சபாநாயகர்
மாநில அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாகக் கூறப்படுவதைக் கண்டித்து, பி.ஆர்.எஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்புச் சட்டைகளை அணிந்து தெலங்கானா சட்டமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்றனர்.
அப்போது அவர்களை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியதால் கடும் வாக்குவாதம் உருவானது.

அப்போது பி.ஆர்.எஸ் கட்சியின் சட்ட மேலவை உறுப்பினர்களான தாடா மதுசூதன் மற்றும் நவீன் குமார், சபாநாயகர் கட்டம் பிரசாத் குமார்(Gaddam Prasad Kumar) மற்றும் அவரது தாயாரை குறித்து இழிவாக பேசியதாக காங்கிரஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த அவதூறு கருத்துக்கள் தெலங்கானாவின் 4 கோடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி குறிப்பிட்டார்.
பி.ஆர்.எஸ் உறுப்பினர்களின் பேச்சை கண்டித்து அமைச்சர் சீதக்கா அவையில் தனது வருத்தத்தை வெளிப்படுத்திய போது சபாநாயகர் கட்டம் பிரசாத் குமார் கண் கலங்கினார்.
இந்த அவதூறு பேச்சு தொடர்பாக சட்டசபை சபாநாயகருக்கான சிறப்புப் பணி அதிகாரி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், 2 மேலவை உறுப்பினர்கள் மீதும், பி.என்.எஸ் மற்றும் எஸ்.சி/எஸ்.டி (பி.ஓ.ஏ) சட்டபிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இருவரையும் கைது செய்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |