பேச்சுவார்த்தைக்காக மகளின் காதலனை அழைத்த தாய்: உயிர் பலியில் முடிந்த சம்பவம்
இந்தியாவின் தெலங்கானாவில், தன் மகளின் காதலனை பேச்சுவார்த்தைக்காக வீட்டுக்கு அழைத்த தாய் அடித்த அடியில் அந்த இளைஞர் உயிரிழக்க, அவர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உயிர் பலியில் முடிந்த சம்பவம்
தெலங்கானாவில் பல ஆண்டுகளாக தன் மகளைக் காதலித்துவந்த இளைஞரை பேச்சுவார்த்தைக்காக அழைத்துள்ளார் அந்தப் பெண்ணின் தாய்.

நேற்று அந்த 19 வயது இளைஞர் தன் காதலியின் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில், பேச்சுவார்த்தையின்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அந்தப் பெண் கர்ப்பமுற்றதாக பேச்சு வர, அவரை அடித்துள்ளார் அவரது தாய். அந்த இளைஞர் தன் காதலி அடிவாங்குவதைத் தடுக்க முயல, அவரை கிரிக்கெட் மட்டையால் சரமாரியாகத் தாக்கியுள்ளார் அந்தப் பெண்ணின் தாய்.
படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.
அதைத் தொடர்ந்து அந்த இளம்பெண்ணின் தாய் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த இளம்பெண்ணின் வீட்டுக்கு பேச்சுவார்த்தைக்காக உறவினர்கள் பலர் அழைக்கப்பட்டிருந்த நிலையில், அந்தப் பெண்ணின் தாய் மட்டுமே அந்த இளைஞரைத் தாக்கினாரா, அல்லது வேறு யாரும் கூட தாக்கினார்களா என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |