ரூ.1000 கோடி சொத்துக்களுடன் குழந்தை வேண்டுமா? - பிரபல தொழிலதிபர் வழங்கும் வாய்ப்பு
தனது நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சொத்துக்களை பிரித்து வழங்க உள்ளதாக பாவெல் துரோவ் அறிவித்துள்ளார்.
பாவெல் துரோவ்
ரஷ்யாவை சேர்ந்த 41 வயதான பாவெல் துரோவ்(Pavel Durov), பிரபல சமூக ஊடகமான டெலிகிராமின் நிறுவனர் ஆவார்.

இவரின் சொத்துமதிப்பு, 17 பில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.1.52 லட்சம் கோடி) என மதிப்பிடப்படுகிறது.
இவருக்கு 3 துணைவிகளுடன், 6 குழந்தைகள் உள்ளது.
அதேவேளையில், 2010 ஆம் ஆண்டு முதல் இவர் விந்துதானம் செய்ததன் மூலம், குறைந்தது 12 நாடுகளில் தனக்கு 100 குழந்தைகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனக்கு அனைத்து குழந்தைகளும் சமம் என்பதால், தன்னுடைய சொத்துக்கள் அனைத்து குழந்தைகளும் சமமாக பிரித்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அனைத்து குழந்தைகளுக்கும் சொத்து
அதேவேளையில், தற்போது இருந்து 30 ஆண்டுகளுக்கு பிறகே சொத்து குழந்தைகளுக்கு செல்லும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவரது விந்தணுக்களை சேமித்து வைத்துள்ள மருத்துவமனை ஒன்று, 37 வயதிற்குட்பட்ட திருமணமாகாத பெண்கள், அவரின் விந்தணுக்கள் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.

அவ்வாறு IVF முறையில் குழந்தை பெற்று கொள்ளும் பெண்களின் மருத்துவ செலவை ஏற்றுக்கொள்ள பாவெல் துரோவ் உறுதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்கு பல பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வந்துள்ள நிலையில், பாவெல் துரோவ்வின் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.
"ஆரோக்கியமான விந்தணுக்களின் பற்றாக்குறை உலகளவில் அதிகரித்து வரும் ஒரு தீவிரமான பிரச்சினையாக மாறியுள்ளது. அதைப் போக்க நான் என் பங்கைச் செய்ததில் பெருமைப்படுகிறேன்" என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்வாறு பிறக்கும் குழந்தைகள் ஒருவருக்கு ஒருவரை அடையாளம் காண உதவும் வகையில், தனது மரபணு தகவலை திறந்த மூலமாக்கத்(DNA Open Source) திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.
தற்போது, அவரது 106 குழந்தைகளுக்கு சொத்துக்களை சமமாக பிரித்து வழங்கினால், ஒரு குழந்தைக்கு இந்திய மதிப்பில் ரூ.1,440 கோடி கிடைக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |