பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போல் இனி டெலிகிராமிலும் ஸ்டோரி வைக்கலாம்: வெளியான புதிய அப்டேட்
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் உள்ள ஸ்டோரி வைக்கும் வசதிகள் டெலிகிராமிலும் அறிமுகப்படுத்தி இருப்பதாக அதன் நிறுவனர் பவெல் துரோவ் தெரிவித்துள்ளார்.
டெலிகிராமில் புதிய அப்டேட்
தற்போதைய இளைய தலைமுறைகள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் ஆப் ஆகிய சமூக வலைதளங்கள் மூலம் தங்களுடைய அனைத்து நடவடிக்கைகளையும் நிமிடத்திற்கு நிமிடம் வெளியுலகிற்கு தெரியப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இளைய தலைமுறையினருக்கு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் ஆப்பில் உள்ள ஸ்டோரி வைக்கும் அம்சம் மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் இளைய தலைமுறையினரை கவரும் வகையில் டெலிகிராமும் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில் இனி பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போல டெலிகிராமிலும் பயனர்கள் தங்களுக்கு விருப்பமானவற்றை அவர்களது ஸ்டோரியில் வைத்துக் கொள்ளலாம் என டெலிகிராம் நிறுவனத்தின் நிறுவனர் பவெல் துரோவ் தெரிவித்துள்ளார்.
எப்போது அறிமுகம்
இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில், தற்போதைய புதிய அப்டேட்டிற்கான பணிகள் நடந்து வருகிறது.
வரும் ஜூலை மாத இறுதிக்குள் புதிய அப்டேட் அம்சம் நடைமுறைக்கு வந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மற்ற செயலிகளில் உள்ளது போல் தங்களது ஸ்டோரிகளை யாரெல்லாம் பார்க்கலாம் என்பதை பயனர்களே முடிவு செய்து கொள்ளலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |