வாட்ஸ் அப்புக்கு சவால் விடும் டெலிகிராம்! அசத்தலான புதிய அப்டேட்கள்
டெலிகிராம் செயலியானது செய்தி பகிரும் தளங்களில் பிரபலமாக விளங்கி வருகிறது. பயனர்களுக்கு பல புதிய அப்டேட்டுகளை வழங்கி, வாட்ஸ்அப் தளத்திற்கு நேரடி போட்டியாளராக டெலிகிராம் உள்ளது.
அந்த வகையில் டெலிகிராம் வெளியிட்டுள்ள புதிய அப்டேட்டில் கஸ்டம் நோட்டிபிகேஷன் சவுண்ட், கஸ்டம் மியூட் டியுரேஷன்ஸ், ஆட்டோ டெலிட் மெனு போன்ற அம்சங்கள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ஆட்டோ டெலிட்
ஆட்டோ டெலிட் அம்சம் ஏற்கனவே நிறுவப்பட்டிருந்தாலும், குறிப்பிட்ட தொடர்புகளுக்கு இந்த அம்சத்தினை செயல்படுத்த முடியாது. தற்போது கொடுக்கப்பட்டிருக்கும் அப்டேட்டில் குறிப்பிட்ட தொடர்புகளுக்கு இந்த ஆட்டோ டெலிட் அம்சத்தை ஆக்டிவேட் செய்ய முடியும்.
இந்த அம்சத்தை இரண்டு நாட்கள், மூன்று வாரங்கள், நான்கு மாதங்கள் அல்லது அதற்கும் மேற்பட்ட காலக்கட்டம் வரை செட் செய்து கொள்ளலாம்.
கஸ்டம் நோட்டிபிகேஷன்
டெலிகிராம் செயலியில் உங்களின் இசைப் பட்டியலில் இருந்தோ அல்லது வேறு ஏதேனும் ஒலிகளை சமிஞ்சை டோனாக செட் செய்து கொள்ள முடியும். இதனை ஆக்டிவேட் செய்ய செயலியின் செட்டிங்ஸ் - நோட்டிபிகேஷன்ஸ் - சவுண்ட்ஸ் ஆப்ஷன்களை தேர்வு செய்து, தேவையான டோன்களை செட் செய்ய வேண்டும்.
தனிப்பட்ட அரட்டைகள் அல்லது முழு அரட்டைகளுக்கு இப்போது தனி டோன்களை செட் செய்யலாம். இவ்வாறு செய்யும் போது குறிப்பிட்ட தொடர்புகள் அல்லது குழுக்களில் இருந்து செய்தி வருவதை, ஒலியை வைத்தே அறிந்து கொள்ள முடியும்.
கஸ்டம் மியூட்
தற்போது குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் நோட்டிபிகேஷன்களை வராமல் தடுக்க, அவற்றை பாஸ் செய்ய முடியும். சிறுது நேர உறக்கம் அல்லது வேறு ஏதேனும் பணி சூழலில் ஈடுபடும் போது நோட்டிபிகேஷன்களால் வரும் தொந்தரவுகளை இந்த அம்சம் மூலம் தவிர்க்க முடியும்.