அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: 226 பந்துகளில் சதமடித்து அணியை காப்பாற்றிய பவுமா
Temba bavuma century vs australia in 2nd test: அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் டெம்பா பவுமா சதம் அடித்தார்.
செயின்ட் ஜார்ஜ் பார்க்கில் நடந்து வரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டெம்பா பவுமா சதம் விளாசினார்.
விக்கெட்டுகள் சரிவு
தென் ஆப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி செயின்ட் ஜார்ஜ் பார்க்கில் நடந்து வருகிறது.

மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்பட, இரண்டாம் நாளிலும் மழை குறுக்கிட்டது. தற்போது மூன்றாவது நாளில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸை ஆடி வருகிறது.
தென் ஆப்பிரிக்கா 40 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாற, ரியான் ரிக்கெல்டன் 31 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஜென்ஸன் மற்றும் டெம்பா பவுமா கூட்டணி
அதன் பின்னர் மார்கோ ஜென்ஸன் மற்றும் டெம்பா பவுமா கூட்டணி நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

அதிரடியாக ஆடிய மார்கோ ஜென்ஸன் (Marco Jansen) 100 பந்துகளில் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 85 ஓட்டங்கள் எடுத்து போலண்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இந்தக் கூட்டணி 7வது விக்கெட்டுக்கு 132 ஓட்டங்கள் குவித்தது. அணித்தலைவரான டெம்பா பவுமா (Temba Bavuma) 226 பந்துகளில் 5வது சதத்தினை பதிவு செய்தார்.
தென் ஆப்பிரிக்க அணியை தனது பந்துவீச்சில் அச்சுறுத்திய ஸ்கொட் போலண்ட் (Scott Boland) 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
