மாளிகையை காலி செய்ய 1,00,000 டொலர் வேண்டும்! வாடகை தராமல் 540 நாட்களாக வசிக்கும் பெண்..திண்டாடும் உரிமையாளர்
அமெரிக்காவில் விருந்தினர் மாளிகையை பெண்ணொருவருக்கு வாடகைக்கு விட்ட நபர், அவரை வெளியேற்ற முடியாமல் தவித்துவருகிறார்.
விருந்தினர் மாளிகை
சாஸ்கா ஜோவனோவிக் என்ற பல் அறுவை சிகிச்சை மருத்துவர், ப்ரெண்ட்வுட் மலைப்பகுதியில் அமைந்துள்ள தனது Airbnb விருந்தினர் மாளிகையை வாடகைக்கு விட்டுள்ளார்.
Michael Gray / The Chronicle
அதில் தங்கியிருக்கும் எலிசபெத் ஹிர்ஷ்ஹார்ன் என்ற பெண், ஓர் இரவுக்கு 105 டொலர் என்ற அடிப்படையில் வாடகைக்கு எடுத்த நிலையில், கடந்த 540 நாட்களாக வாடகை தரவில்லை.
இதனால் வேறொருவருக்கு மாளிகையை வாடகைக்கு விட நினைத்த ஜோவனோவிக், அப்பெண்ணிடம் இடத்தை காலி செய்யுமாறு கூறியுள்ளார்.
Allen J. Schaben / Los Angeles Times | Getty Images.
ஆனால் எலிசபெத் அதற்கு மறுப்பு தெரிவித்து, இங்கே தங்குவதற்கு தனக்கு உரிமை இருக்கிறது என்று கூறியுள்ளார். இந்த விடயம் நீதிமன்றத்திற்கு சென்ற பின்னர் ஜோவனோவிக்கு மேலும் தலைவலி உண்டானது.
அதிர்ச்சி அளித்த நீதிபதி
வழக்கை விசாரித்த நீதிபதி, லாஸ் ஏஞ்சல்ஸ் வாடகைக் கட்டுபாட்டு சட்டத்தின் கீழ் அவரை வெளியேற்றுவதற்கு சட்டப்பூர்வ காரணம் எதுவும் இல்லை என்று தீர்ப்பளித்தார்.
மேலும், ஜோவனோவிக் தனது மாளிகையை ஆக்கிரமிப்பு சான்றிதழோ அல்லது ஷவர் கட்டுவதற்கான அனுமதியோ இல்லாமல் வாடகைக்கு விட்டுள்ளார்.
கலிபோர்னியா சட்டப்படி இது சட்டப்பூர்வமான வாடகை அல்ல என்றும், எலிசபெத் இடத்தை காலி செய்ய வேண்டும் என்றால் அவருக்கு உரிமையாளர் 1,00,000 டொலர் தர வேண்டும் என்றும் அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.
இதனால் என்னசெய்வது என்று தெரியாமல் ஜோவனோவிக் விழிபிதுங்கி நிற்கிறார். இந்த விடயத்தை லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் செய்தியாக வெளியிட்டதில் பேசுபொருளாகியுள்ளது.
Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |