மகளை சுட்டுக்கொன்ற தந்தை! தோழி சொன்ன பகீர் தகவல்கள்
முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவை அவரது தந்தை சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
ஹரியானாவின் குருகிராம் நகரில் பெற்றோருடன் முன்னாள் டென்னிஸ் வீராங்கனையான ராதிகா யாதவ்(வயது 25) வசித்து வந்தார்.
இவரை அவரது தந்தை தீபக் யாதவ்(வயது 49) சுட்டுக்கொன்றார், குற்றத்தையும் ஒப்புக்கொண்டார்.
ராதிகாவை நோக்கி 5 முறை தீபக் சுட்ட நிலையில், மூன்று குண்டுகள் பின்புறத்தில் பாய்ந்தது, இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் ராதிகாவின் யாதவின் தோழியும், தடகள வீராங்கனையுமான Himaanshika Singh Rajput, ராதிகாவுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ராதிகா சுதந்திரமாக இருப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை, அவளது வெற்றியை கண்டு பொறாமைப்பட்டவர்களின் பேச்சை கேட்கத் தொடங்கினர்.
அவளது விருப்பத்துக்கு இணையாக உடை அணிவதையும் தடுத்தனர், ஆண் நண்பர்களுடன் பேசியதற்காகவும், தன் விருப்பத்திற்கு ஏற்றவாறு நடந்து கொண்டதற்காகவும் ராதிகாவை அவமானப்படுத்தினர்.
வீடியோ அழைப்பில் பேசினால் கூட யாருடன் பேசுகிறார் என்பதை பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும், வீட்டிலிருந்து 50 மீற்றர் தொலைவில் உள்ள டென்னிஸ் அரங்கிலிருந்து கூட தாமதமாக வரக்கூடாது.
2012, 2013ம் ஆண்டுகளில் நான் அவளுடன் சேர்ந்து பயணித்துள்ளேன். அவளது குடும்ப உறுப்பினர்களை தவிர்த்து வேறு யாருடனும் பேசி நான் பார்த்ததில்லை, அவளுக்கு நிறைய கட்டுப்பாடுகள் இருந்தது.
அவளுக்கு புகைப்படங்கள், வீடியோக்கள் எடுப்பது பிடிக்கும், அதைக்கூட பெற்றோர் தடுத்தனர் என கூறியுள்ளார்.
இந்த கொலைக்குற்றத்திற்கும், ராதிகாவின் தாய் மஞ்சு யாதவ்க்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.