கட்டாய ராணுவ சேவை: ஜேர்மன் ஆளும் கூட்டணியில் கருத்துவேறுபாடு
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் பல தங்கள் ராணுவத்தை பலப்படுத்தும் முயற்சிகளை துவக்கியுள்ளன.
அவ்வகையில், ஜேர்மனியும் தனது ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பது தொடர்பில் பல திட்டங்களைத் தீட்டிவருகிறது.
கட்டாய ராணுவ சேவை
டென்மார்க் போன்ற சில நாடுகளில், ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பதில் லொட்டரி முறை என்னும் ஒரு வழிமுறை பின்பற்றப்படுகிறது.
இந்த லொட்டரி முறை என்பது என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட நாளில் நாட்டிலுள்ள இளைஞர்கள் அனைவரும் ராணுவ ஆள் சேர்ப்பு தேர்வு ஒன்றில் பங்கேற்கவேண்டும்.
மொழி, கணிதம் முதல் உடல் மற்றும் மருத்துவப் பரிசோதனை வரை பல வகையான தேர்வுகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறுவோர் ஒரு ட்ரம்மிலிருந்து லொட்டரிச்சீட்டு ஒன்றை எடுக்கவேண்டும்.
குறைந்த எண் கொண்டவர்கள் கட்டாய ராணுவ சேவையில் பங்கேற்க வேண்டும், அதிக எண் கொண்டவர்களுக்கு கட்டாய சேவையிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
ஜேர்மன் ஆளும் கூட்டணியில் கருத்துவேறுபாடு
நேற்று செவ்வாயன்று, இதேபோன்றதொரு திட்டத்தை அறிமுகம் செய்ய ஜேர்மன் ஆளும் கட்சிகள் முடிவு செய்திருந்தன.
ஆனால், ஆளும் கூட்டணிக்குள் இந்த கட்டாய ராணுவ சேவை குறித்து கருத்துவேறுபாடு உருவாகியுள்ளது. ஆளும் கூட்டணியிலுள்ள Christian Democrats (CDU) மற்றும் center-left Social Democrats (SPD) கட்சிகள் இந்த விடயத்தில் முதலில் ஒத்துப்போக, பின்னர், SPD கட்சியின் இளைய தலைமுறை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்டாய ராணுவ சேவை திட்டத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளனர்.
ஆகவே, கூட்டணிக்குள் கருத்துவேறுபாடு உருவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து நேற்று செவ்வாயன்று லொட்டரி திட்டத்தை அறிமுகம் செய்யும் திட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |