சிறந்த Term Insurance ஒன்றை எவ்வாறு தெரிவு செய்வது? முழுமையான விளக்கம்
நம் அனைவரின் வாழ்க்கையிலும் நிதி ஒரு முக்கிய பங்கு வகிப்பதால், குறைந்தபட்சம் நமது குடும்பத்தின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாக்க போதுமான ஏற்பாடுகளைச் செய்வது நமது மிகப்பெரிய பொறுப்புகளில் ஒன்றாகும்.
டேர்ம் காப்பீடு
திடீரென்று ஏற்படும் ஒரு பேரிழப்பு, உங்கள் குடும்பத்திற்கு நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான குறைந்த செலவில் மிகவும் பயனுள்ள ஒரு காப்பீட்டுத் திட்டம் ஆகும் டேர்ம் காப்பீடு.

குறைந்த பிரீமியத்தில் அதிக பாதுகாப்பு வழங்கும் தன்மை காரணமாக, டேர்ம் காப்பீடு (Term Insurance) என்பது தற்போது இந்தியாவில் மிகவும் பிரபலமான ஆயுள் காப்பீட்டு திட்டமாக மாறியுள்ளது.
மேலும், தற்போது பல நிறுவனங்கள் டேர்ம் காப்பீட்டை வழங்குவதால், இணையத்தில் அதன் பலன்களை ஒப்பீடு செய்தும் வாங்க முடியும். குறிப்பிட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுவதால் டேர்ம் காப்பீடு என அடையாளப்படுத்துகிறார்கள்.
இது ஒரு குறிப்பிட்ட ஆண்டுகள் வரை பாதுகாப்பு அளிக்கும் ஒப்பந்தமாகும். அந்தக் காலத்திற்குள் காப்பீடு வாங்கிய நபர் மரணமடைந்தால், அவரது குடும்பத்தினருக்கு முன்னதாக ஒப்புக்கொண்ட தொகை வழங்கப்படும்.
இது ஒரு முதலீடு திட்டம் இல்லை என்பதால், பிரீமியம் குறைவாகவும் பாதுகாப்பு அதிகமாகவும் இருக்கும். எஞ்சிய காப்பீட்டு திட்டங்களை ஒப்பிடுகையில், டேர்ம் காப்பீட்டில் நீங்கள் செலுத்த வேண்டிய தொகை மிகவும் குறைவு. அதாவது, மாதம் சில நூறு ரூபாய்களில் கூட ஒரு குடும்பம் கோடிக்கணக்கான ரூபாய் பாதுகாப்பை பெற முடியும்.
இந்த திட்டமானது சாதாரண வருமானம் உள்ளவர்கள் முதல் நடுத்தர குடும்பங்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தின் தலைவர் திடீரென்று மறைந்தால், அந்த குடும்பத்திற்கு அது பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்.
அப்படியான குடும்பங்களுக்கு டேர்ம் காப்பீட்டு பேருதவியாக இருக்கும். டேர்ம் காப்பீடு ஒப்பந்தத்தில் மறைமுக நிபந்தனைகள் இல்லை, முழுக்க பாதுகாப்பை மட்டுமே உறுதி செய்கிறது.

சரியான டேர்ம் காப்பீட்டு திட்டத்தைத் தெரிவு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டியவை:
காப்பீட்டு தொகை
குடும்பத்தின் எதிர்கால நிதி தேவைகளைப் பாதுகாக்கும் அளவிற்கான பாதுகாப்பு தொகையைத் தெரிவு செய்ய வேண்டும். வருட வருமானத்தின் குறைந்தது பத்து முதல் பதினைந்து மடங்கு வரை பாதுகாப்பு வைத்துக்கொள்வது சிறப்பு.
காப்பீட்டு காலம்
வயது மற்றும் நிதி பொறுப்புகளை அடிப்படையாகக் கொண்டு காலத்தைத் தெரிவு செய்ய வேண்டும். இளம் வயதில் வாங்கினால் செலுத்தும் தொகை மிகவும் குறைவாக இருக்கும். வயது அதிகரிக்கும்போது பிரீமியம் அதிகரிக்கும்.
செலுத்தும் தொகை
குடும்ப வருமானத்திற்கும் மாதாந்திர செலவுகளுக்கும் பொருந்தும் அளவில் பிரீமியத்தைச் செலுத்தக்கூடிய திட்டத்தைத் தெரிவு செய்ய வேண்டும்.
கூடுதல் பாதுகாப்பை சேர்த்தல்
தீவிர நோய் பாதுகாப்பு, விபத்து மரண பாதுகாப்பு, வருமான மாற்று பாதுகாப்பு போன்றவையை கூடுதலாக சேர்த்தால் குடும்பத்திற்கு அதிக நன்மை கிடைக்கும்.
கிளைம் வழங்கும் விகிதம்
இதில், கிளைம் விகிதம் அதிகம் கொண்ட நிறுவனத்தைத் தெரிவு செய்வது சிக்கலின்றி, குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும்.
நம்பகத்தன்மை மற்றும் சேவை
காப்பீட்டு நிறுவனம் எவ்வளவு விசுவாசத்துடன் செயல்படுகிறது, வாடிக்கையாளர் சேவை எப்படி உள்ளது, claim செய்யும் போது ஆதரவு கிடைக்குமா என்பதையும் வாடிக்கையாளர்கள் ஆராய்ந்துகொள்ள வேண்டும்.

இணையத்தால் கிடைக்கும் நன்மைகள்:
ஒப்பிடும் வசதி
இணையத்தில் பல நிறுவனங்களின் டேர்ம் காப்பீட்டு திட்டங்களை ஒப்பிட்டு பார்க்கலாம். பாதுகாப்பு தொகை, பிரீமியம், காலம், நிபந்தனைகள், கூடுதல் பாதுகாப்புகள் போன்றவற்றை ஒரே பார்வையில் அறிந்து கொண்டு முடிவு எடுக்க வாய்ப்பு. இதனால் தங்களின் நிதி நிலைக்கு ஏற்ப பொருத்தமான ஒரு திட்டத்தை எளிதில் தெரிவு செய்ய முடியும்.
ஆவணங்கள் பதிவேற்றம்
இணயமூடாக தேவையான ஆவணங்களை சில நொடிகளில் பதிவேற்றம் செய்ய முடியும். DigiLocker வசதி இருந்தால், ஆவணங்களைத் தனித் தனியாக பதிவேற்றும் தேவையும் இருக்காது. நிபந்தனைகள், வரம்புகள், விலக்குகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தெளிவாக இணையத்தில் காண்பிக்கப்படுவதால் குழப்பம் ஏற்படாது.
செலவு குறைவு
ஒரு நிறுவனத்திடம் இருந்து இணையமூடாக நேரடியாக காப்பீட்டை வாங்குவதால் நடுவண் முகவர் கமிஷன் இருக்காது. இதனால் பிரீமியம் தொகை மேலும் குறைவாக இருக்கும்.

விரைவான அங்கீகாரம்
காப்பீட்டு அங்கீகாரத்திற்காக காத்திருக்க வேண்டியதில்லை. தற்போது e-KYC செயல்முறை மூலம் சில மணிநேரங்களில் அல்லது சில நிமிடங்களிலேயே அங்கீகாரம் கிடைக்கிறது.
வாடிக்கையாளர் சேவை
வரிகள், நிபந்தனைகள், claim செயல்முறை போன்றவற்றை பற்றி சந்தேகம் எழும்போது இணையமூடாக 24 மணி நேரமும் உதவி பெற வாய்ப்பு உள்ளது.
பண பரிமாற்றம்
நிறுவனங்கள் அனைத்தும் தற்போது உயர் பாதுகாப்பு முறை மற்றும் ஒருமுறை கடவுச்சொல் சரிபார்ப்புகளை பயன்படுத்துவதால், பண பரிமாற்றம் பாதுகாப்பாக இருக்கும். இதனால் இணையத்தில் காப்பீடு வாங்குவதில் பயம் அல்லது சந்தேகத்திற்கு இடம் இல்லை.
காலக்கெடுவை 10, 20 அல்லது 30 ஆண்டுகள் என வைத்துக்கொள்ளலாம். பேரிழப்பு ஏற்பட்டால், ஒருவர் பரிந்துரைத்த பயனாளிகள் மொத்த தொகையைப் பெறுவார்கள். ஆனால், 10 வருடங்களுக்கான ஒரு டேர்ம் காப்பீட்டில், காலாவதி முடிவடைந்தால் காப்பீட்டு வாங்கியவருக்கு பணம் திரும்பக்கிடைப்பதில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |