பசிபிக் பெருங்கடலில் பயங்கர நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை
பசிபிக் பெருங்கடலில் பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்ட நிலையில், அது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியுள்ளது. சுனாமி உருவாகலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி புறப்பட்டுள்ளார்கள்.
டோங்கா தீவு மக்கள் கலக்கம்
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டோங்கா தீவுக்கு 130 மைல் தென்கிழக்கே கடலில் இந்த பயங்கர நிலநடுக்கம் உருவாகியுள்ளது. கலக்கமடைந்துள்ள அந்த தீவிலுள்ள மக்கள் பயங்கர இயற்கைச் சீற்றம் ஒன்றை எதிர்கொள்ளத் தயாராகிவருகிறார்கள்.
அந்தத் தீவுவாசியாகிய Pou Panuve என்பவர், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதால் போக்குவரத்து நெரிசல் உருவாகியுள்ளதைக் காட்டும் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
Image: AFP via Getty Images
அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், தாங்கள் அனைவரும் பாதுகாப்பான இடம் நோக்கி சென்றுகொண்டிருப்பதாக தெரிவித்துள்ளதுடன், தங்கள் நாட்டுக்காக பிரார்த்தனை செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அமெரிக்க சமோவா தீவுக்கும் எச்சரிக்கை
இதற்கிடையில், US Tsunami.gov என்னும் அமெரிக்க அமைப்பு, கடல் கொந்தளித்துக்கொண்டிருப்பதையடுத்து அமெரிக்க சமோவா தீவுக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் கூறியுள்ளது.
Image: Getty Images