200 பேர் தங்கும் வசதி கொண்ட முதியோர் இல்லத்தில் பயங்கர தீ: பலர் உயிரிழந்ததாக தகவல்
நியூயார்க்கிலுள்ள முதியோர்களுக்கான நர்ஸிங் ஹோம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த கோர சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும், பலர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் அந்த கட்டிடத்துக்குள் சிக்கியுள்ளதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூயார்க்கின் Spring Valley என்ற இடத்தில் அமைந்துள்ள அந்த முதியோர் இல்லத்தில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தீப்பற்றி எரிவதாக, சம்பவத்தைக் கண்ணால் கண்ட ஒருவர் தெரிவித்தார்.
The brothers in Rockland County have been battling this Nursing Home fire in Spring Valley. Maydays were transmitted. We hope all are OK. pic.twitter.com/2uzOwb5RIm
— NYCFireWire (@NYCFireWire) March 23, 2021
தீ எரியும்போது, திடீரென ஏதோ வெடித்ததாகவும், அந்த கட்டிடத்தின் கூரை அப்படியே சரிந்ததாகவும் சிலர் கூறியுள்ளனர்.
வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், பயங்கரமாக எரியும் தீயின் நடுவே, அந்த கட்டிடம் அப்படியே தீயால் விழுங்கப்படும் திகிலூட்டும் காட்சியைக் காணலாம். தீயணைப்பு வீரர்கள் அந்த தீயை அணைக்க போராடி வருகிறார்கள்.

