கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை இருக்கும் வளாகத்தில் பயங்கர தீ விபத்து! 9 பேர் பலி
இந்தியாவில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை இருக்கும் வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 9 பேர் பலியான சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் உள்ள ட்ரிம்ஸ் வளாகத்திலே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தின் போது ட்ரிம்ஸ் வளாகத்தின் 3வது தளத்தில் இருக்கும் சன்ரைஸ் மருத்துவமனையில் 76 பேர் சிகிச்சை பெற்று வந்துள்ளனர், அதில் 73 பேர் கொரோனா நோயாளிகள் ஆவர்.
இந்த தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாக மும்பை தீயணைப்பு துறையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்
. மீட்கப்பட்ட மற்ற நோயாளிகள் நகரில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர், ஏற்கனவே கொரோனாவால் உயிரிழந்த இருவரின் சடலமும் மாற்றப்பட்டது என அதிகாரி தெரிவித்தார்.
Fire at Dreams Mall in Mumbai’s Bhandup West; at least four dead
— Aakash Shinde (@Aakashshinde_17) March 26, 2021
#bhandup #fire #COVID19 #CoronaVirusUpdates #PMModi #IndiaFightsCorona #Mumbai #CNN #news #Latest #liveupdates #आज_भारत_बंद_है #fridaymorning #FridayMotivation #Trending pic.twitter.com/RX9XwYtbLF
தீ விபத்தில் சிக்கி எத்தனை கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர் என்ற விவரமும், தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
தீ விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக மும்பை நகர மேயர் தெரிவித்துள்ளார்.