பயங்கரமான தவறு... அமெரிக்க விமான விபத்தின் காரணத்தை அம்பலப்படுத்திய நிபுணர்
வாஷிங்டனில் நடந்த மிக மோசமான விமான விபத்துக்கு முந்தைய தருணங்களில் ஆபரேட்டர்கள் செய்த தவறு என்ன என்பது தொடர்பில் 23 ஆண்டுகள் அனுபவம் கொண்ட நிபுணர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
சந்தேகத்திற்கு இடமளிக்கும்
புதன்கிழமை இரவு அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று 64 பேருடன் பயணித்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மீது மோதியது. இந்த கோர விபத்தில் அனைவருமே கொல்லப்பட்டுள்ளனர்.
அந்த பிளாக் ஹாக் ஹெலிகொப்டரானது ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் தரையிறங்கும் பொருட்டு பயணத்ததில், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பாதையில் நுழைந்துள்ளது.
இதனால் நடு வானில் மோதிக்கொண்டுள்ளது. இந்த நிலையில் அனுபவம் வாய்ந்த விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் தெரிவிக்கையில், வெளியான தரவுகளின் அடிப்படையில், அந்த ஹெலிகொப்டரானது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் குறுக்கிட்டதாக பதிவு செய்துள்ளார்.
மேலும், கட்டுப்பாட்டு அறையில் இருந்து விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை அந்த இராணுவ ஹெலிகொப்டர் விமானி கண்டுகொள்ளவும் இல்லை. ஆனால் அமெரிக்காவில் 6 விமான நிலையங்களில் 23 ஆண்டுகள் பணியாற்றியுள்ள அந்த நிபுணர் தெரிவிக்கையில்,
கட்டுப்பாட்டு அறையில் இருந்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை புரிந்துகொள்ளும் வகையில் இல்லை என்றார். விமானம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றால், ஹெலிகொப்டர் விமானி புரிந்துகொள்ளும் வகையில் தெளிவாக இருக்க வேண்டும் என்றார்.
அதிகாரிகளுக்கு முக்கிய பங்கு
விமானிகளுக்கு துல்லியமான தகவல் தெரிவிப்பதில் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கு முக்கிய பங்குள்ளது என்றார். பனிக்காலம் என்பதால் இரு விமானிகளும் மற்றவரின் இருப்பை அறியாதது போல் தெரிகிறது என்றார்.
இதனால், 400 அடி உயரத்தில் இரு விமானங்களும் மோதியதுடன், Potomac நதியில் விழுந்துள்ளது. பொதுவாக தினசரி 10 மணி நேரம், வாரத்தின் 6 நாட்களும் கட்டுப்பாட்டு அறையில் ஒருவர் பணியாற்றும் நிலை உள்ளது.
இந்த விபத்தை அடுத்து முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணையில், கட்டுப்பாட்டு அறையில் ஊழியர்கள் பற்றாக்குறையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |