முதலைகள் இருக்கும் ஏரிக்குள் குதித்த நபருக்கு நேர்ந்த கதி! கேமராவில் பதிவான திக் திக் காட்சி
பிரேசிலில் முதலைகள் இருக்கும் ஏரிக்குள் எச்சரிக்கையை மீறி உள்ளே குதித்த நபர் உயிர் பிழைக்க படாதபாடு பட்ட வீடியோ காட்சி வெளியாகி இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
பிரேசிலின் பிரபல சுற்றுலாப் பகுதியான Campo Grande-வில் உள்ள Lago do Amor ஏரியில் முதலைகள் இருப்பதால், இந்த நீருக்குள் யாரும் செல்லக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 23-ஆம் திகதி மாலை உள்ளூர் நேரப்படி 4.40 மணியளவில், இந்த ஆபத்தான ஏரியின் உள்ளே திடீரென்று நபர் ஒருவர் குதித்தார். கரையில் இருந்து சுமார் 90 அடி தூரம் சென்ற அவரை, திடீரென்று ஏரியின் உள்ளே இருந்த முதலை ஒன்று விரட்ட ஆரம்பித்துவிட்டது.
இதை முற்றிலும் எதிர்பார்க்காத அவர் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, வேகமாக நீச்சல் அடித்து வந்தார். ஆனால், முதலையானது அவரை நெருங்கி அவரை கடிக்க துவங்கியது. இதனால் உயிர்பயத்தில் அவர் அசுர வேகத்தில் நீச்சல் அடித்து கரையை அடைந்தார்.
இருப்பினும் அவரது கையில், காயம் இருந்ததால், இரத்தம் வடிந்த நிலையில், ஒரு வித பயத்துடன் கரையில் நின்ற போது,அவர் இங்கு முதலை இருப்பது தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.
இதை அங்கிருந்த Willyan Caetano என்பவர் விடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார்.