மனிதர்கள், விலங்குகள் என... ஒரே இரவில் கிராமமே சுடுகாடான கொடூர சம்பவம்: தெரியவந்த உண்மை

Africa Cameroon
By Arbin Aug 21, 2023 10:31 AM GMT
Report

மேற்கு ஆப்பிரிக்காவின் சிறிய கிராமம் ஒன்றில் சுமார் 37 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே இரவில், அங்குள்ள மனிதர்கள், விலங்குகள் பறவைகள் பூச்சிகள் என மொத்தமும் மரணமடைந்த சம்பவம் தற்போதும் அங்கு திகிலை ஏற்படுத்தி வருகிறது.

அனைவரும் இறந்து போன தகவல்

கடந்த 1986 ஆகஸ்டு 21ம் திகதி மேற்கு ஆப்பிரிக்காவின் கேமரூன் நாட்டில் சிறிய கிராமமான நியோஸ் பகுதியில் இரவு சுமார் 9 மணிக்கு தொலைவில் எங்கோ இடி விழுந்தது போன்ற ஒரு சத்தம் கேட்டுள்ளது.

மனிதர்கள், விலங்குகள் என... ஒரே இரவில் கிராமமே சுடுகாடான கொடூர சம்பவம்: தெரியவந்த உண்மை | Terrifying Night Entire Village Dropped Dead @getty

அடுத்த நாள் பகல் கண் விழித்த அந்த கிராமவாசிகளில் ஒருவர், தமக்கு அறிமுகமான அனைவரும் இறந்து போன தகவல் கேட்டு ஸ்தம்பித்து போயுள்ளார். வெறிச்சோடிய மற்றும் அமைதியான கிராமத்தின் வழியாக மயக்கமான நிலையில் நடந்தார்.

அப்போது பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டு, அவரை நெருங்கியுள்ளார். குறித்த பெண்ணும் இவருக்கு அறிமுகமானவர் தான், அவரது கால் அருகே அந்த பெண்ணின் பிள்ளைகள் சடலமாக காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், அந்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் நெருக்கமானவர்கள் 30 பேர்களின் சடலம் அப்பகுதியில் காணப்பட்டுள்ளது. மட்டுமின்றி, அவர்களின் 400 கால்நடைகளும் சடலமாக மீட்டுள்ளனர்.

மனிதர்கள், விலங்குகள் என... ஒரே இரவில் கிராமமே சுடுகாடான கொடூர சம்பவம்: தெரியவந்த உண்மை | Terrifying Night Entire Village Dropped Dead @getty

1,746 கிராம மக்களும் 3,500 விலங்குகளும்

அந்த நாள், சடலங்களின் மீது ஈக்கள் ஏதும் மொய்க்கவில்லை என்பதையும் அந்த கிராமவாசி புரிந்துகொண்டுள்ளார். முந்தைய நால் இரவு 9 மணிக்கு யார் யார் எங்கே இருந்தார்களோ, அங்கேயே சடலாமாக கிடந்துள்ளனர்,

மொத்தம் 1,746 கிராம மக்களும் 3,500 பண்ணை விலங்குகளும் இறந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் அந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

மனிதர்கள், விலங்குகள் என... ஒரே இரவில் கிராமமே சுடுகாடான கொடூர சம்பவம்: தெரியவந்த உண்மை | Terrifying Night Entire Village Dropped Dead Credit: US Geological Survey

அதாவது அருகில் உள்ள நியோஸ் ஏரியில் இருந்து கார்பன் டை ஆக்சைட் வாயு ஒரு வினோதமான சத்தத்துடன் வெளியேறியுள்ளது. மொத்தமாக 1.6 மில்லியன் டன் அளவுக்கு கார்பன் டை ஆக்சைட் வாயு அந்த இரவில் வெளியேறியதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாகவே அந்த ஏரி அருகாமையில் குடியிருக்கும் மக்கள் மொத்தமாக மூச்சுத்திணறி மரணமடைந்துள்ளனர். பொதுவாக நீல வண்ணத்தில் காணப்படும் அந்த ஏரி நீர், அதன் பின்னர் ரத்த சிவப்பாக மாறியது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US