ஜெருசலேமில் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல்: 3 பலி, 6 பேர் படுகாயம்
இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இரண்டு பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஜெருசலேம் நகரில் துப்பாக்கிச் சூடு
இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் 2 வது முறையாக மேலும் 2 நாள் நீடிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய நிலவரப்படி, ஹமாஸ் படையினர் 63 இஸ்ரேலியர்கள் மற்றும் 20 வெளிநாட்டினரை விடுதலை செய்துள்ளனர், இதற்கு மாற்றாக 180 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.
#BREAKING | At least 6 people shot in Jerusalem, 2 attackers killed#القدس pic.twitter.com/UumWKU3fe5
— Breaking news 24/7 (@aliifil1) November 30, 2023
இந்நிலையில் இஸ்ரேலிய நகரான ஜெருசலேமில் உள்ள பேருந்து நிலையத்தில் அல்-கஸ்ஸாம் படைகளை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி இருப்பதாக ஹமாஸ் ராணுவ படையின் செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
3 பேர் உயிரிழப்பு
பேருந்து நிலையத்தின் மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கி சூடு திடீர் தாக்குதலில் 3 பேர் வரை கொல்லப்பட்டதுடன், 6 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ காட்சிகளில், பேருந்து நிலையத்தில் முன் நிறுத்தப்பட்ட காரில் இருந்து இறங்கிய இரண்டு பேர் அங்கு நின்று கொண்டு இருந்த பயணிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதை பார்க்க முடிகிறது.
Chaim Goldberg/Flash90
இதையடுத்து அப்பகுதியில் இருந்த பொலிஸார் மற்றும் பொதுமக்களில் ஒருவர் பயங்கரவாதிகளை நோக்கி பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 2 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |