பொலிஸாருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் பரிதாபமாக பலி
பாகிஸ்தானில் பொலிஸாருக்கும் பயங்கரவாதிகளும் இடையே நடந்த துப்பாக்கிச் சூடு சண்டையில் 8ம் வகுப்பு மாணவனின் உயிர் பரிதாபமாக பலியாகி உள்ளது.
உளவுத்துறை தகவல்
பாகிஸ்தானின் பைகர் பாக்துன்க்வா மாகாணத்தில் உள்ள கோட் ஆசம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத் துறை மூலம் பாகிஸ்தான் காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்உ விரைந்த பொலிஸார் பயங்கரவாதிகளின் இருப்பிடத்தை சுற்றி வளைத்தனர்.
iStock
இதனை அறிந்து கொண்ட பயங்கரவாத கும்பல் பொலிஸாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்த தொடங்கினர், பதிலுக்கு பொலிஸாரும் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கி சண்டையில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
8ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு
இந்த சண்டையில் துரதிஷ்டவசமாக இரண்டு 8ம் வகுப்பு மாணவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சோதனையின் முடிவில் பயங்கரவாதிகள் பயன்படுத்திய துப்பாக்கி, தோட்டாக்கள், கையெறி குண்டுகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றினர்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்டுள்ள உடல்நல பாதிப்புகள் என்னென்ன? திடுக்கிட வைக்கும் மருத்துவ அறிக்கை
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |