இந்த உணவுகளை சாப்பிடவேண்டாம்: பிரித்தானிய பல்பொருள் அங்காடியின் அவசர அறிவிப்பு
பிரித்தானியர்கள் அதிகம் வாங்கி உண்ணும் மூன்று உணவுப்பொருட்களை உடனடியாக திருப்பிக் கொடுக்குமாறு பிரபல பிரித்தானிய பல்பொருள் அங்காடி ஒன்று அறிவுறுத்தியுள்ளது.
இந்த உணவுகளை சாப்பிடவேண்டாம்
பிரித்தானியாவின் பிரபல பல்பொருள் அங்காடியான டெஸ்கோ, பிரித்தானியர்கள் அதிகம் வாங்கி உண்ணும் மூன்று உணவுப்பொருட்களை உடனடியாக திருப்பிக் கொடுக்குமாறும், அவற்றை உண்ணவேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
அவற்றில், சால்மோனெல்லா என்னும் நோய்கிருமி இருக்கக்கூடும் என்றும், பாதிக்கப்பட்ட உணவுகளை உண்பதால் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஜூலை 24, 2025 காலாவதி திகதி கொண்ட Tesco Basil Pesto and Semi Dried Tomato Pasta 225g,
ஜூலை 24 மற்றும் 25, 2025 காலாவதி திகதி கொண்ட The Tesco Chicken and Chorizo Pasta 285g,
மற்றும், ஜூலை 24 2025 காலாவதி திகதி கொண்ட Tesco Feta Semi Dried Tomato Pasta 290g ஆகிய உணவுப்பொருட்களே திரும்பப் பெறப்படுகின்றன.
மக்கள் இவற்றில் எதையாவது வாங்கியிருந்தால், அதை உண்ணவேண்டாம் என்றும், அதை திருப்பிக் கொடுத்துவிட்டு அதற்கான பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் டெஸ்கோ பல்பொருள் அங்காட்சி தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |