தானியங்கி முறையில் இயங்கிய டெஸ்லா கார் மோதி பெண் உயிரிழப்பு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் கேட்டி பகுதியில், டெஸ்லா மாடல் 3 கார் தானியங்கி (Autopilot) முறையில் இயங்கிக் கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து ஒரு வீட்டில் மோதியது.
இந்த விபத்தில் 76 வயதான மார்த்தா அவிலா உயிரிழந்தார்.
காரை ஓட்டிய மைக்கேல் பட்லர் சாலையில் லேன் மாற்றாமல் செல்ல தவறியதால், அதிக வேகத்தில் வந்த கார் வீடு மீது மோதியதாக ஹாரிஸ் கவுண்டி பொலிஸ் தெரிவித்துள்ளது.

விபத்தில் அவர் காயமடைந்தார், ஆனால் மதுபோதையில் இல்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
அவிலா வீட்டின் முன்புற அறையில் இருந்தபோது கார் சுவரை உடைத்து உள்ளே புகுந்து அவரை மோதியது. உடனடியாக ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், அங்கு அவர் உயிரிழந்தார்.
அவிலாவின் மகள் ஜெனிபர் பார்பர், “என் அம்மா மிகவும் ஆரோக்கியமாக இருந்தார். எந்த மருந்தும் எடுத்துக்கொள்ளவில்லை. அவர் 100 வயது வரை வாழ்ந்திருப்பார். ஆனால் இந்த விபத்து அவரது வாழ்க்கையை திடீரென முடித்துவிட்டது” என்று தெரிவித்தார்.
அதிகாரிகள் இந்த விபத்துக்கான காரணங்களை தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |