கோடி ரூபாய் மதிப்புள்ள காரை தூள் தூளாக வெடிக்க வைத்த நபர்! சொன்ன காரணம்: வைரலாகும் வீடியோ
டெஸ்ல நிறுவனத்திற்கு சொந்தமான கார் ஒன்றின் பேட்டரியை மாற்ற சுமார் 40 லட்சத்திற்கு மேல் செல்வாகும் என்று கூறப்பட்டதால், ஆத்திரமடைந்த அந்த காரின் உரிமையாளர் காரை வெடி பொருட்கள் வைத்து வெடிக்க வைத்துள்ள வீடியோ இணையத்தில் அதிக அளவில பகிரப்பட்டு வருகிறது.
பின்லாந்தின் Kymenlaakso பகுதியில் உள்ள Jaala கிராமத்தை சேர்ந்தவர் Tuomas Katainen.இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு பிரபல முன்னணி நிறுவனாம டெஸ்லாவின் பிரபல மொடலான Model S வகை பேட்டரி கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
Tuomas Katainen வசித்து வரும் பகுதி, பனிப்பிரதேசம் என்பதால், காரை அவர் அடிக்கடி பயன்படுத்தவில்லை. சுமார் 1300 கிலோமீற்றரே ஓட்டியிருந்த நிலையில், திடீரென்று காரில் பழுது ஏற்பட்டதால், அவர் உடனடியாக டெஸ்லா நிறுவனத்தின் கார் பழுது நீக்கும் பகுதிக்கு வாரண்டி கார்டுடன் சென்றுள்ளார்.
அப்போது காரை பரிசோதித்து பார்த்த ஊழியர்கள், காரின் பழுதை நீக்க முடியாது எனவும், பேட்டரி உள்ளிட்ட பொருட்களை மாற்றினால் மட்டுமே சரியாகும் என்று கூறியுள்ளனர்.
இதைக் கேட்ட அவர், சரி எவ்வளவு பணம் ஆகும் என்று கேட்ட போது, 20,000 யூரோக்கள் செல்வாகும் என்ற் கூற, இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் கார் நான் அந்தளவிற்கு கூட இன்னும் ஓட்டவில்லை, அதற்குள் பேட்டரி போய்விட்டது என்று கூறி, இவ்வளவு தொகையா கேட்பது என்று கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதன் பின் காரை வெடி வைத்து தூள் தூளாக்க முடிவு செய்த அவர், கார் முழுவதும் வெடி பொருட்களை நிரப்பி காரை வெடிக்க வைத்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.