உடைந்து விழும் சைபர்டிரக் உதிரி பாகங்கள்! கார்களை திரும்ப பெறும் டெஸ்லா நிறுவனம்
எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் தங்களது சைபர்டிரக்-களை திரும்ப பெறும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
சைபர்டிரக்-களை திரும்ப பெறும் டெஸ்லா
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் அமெரிக்க நிறுவனமான டெஸ்லா நிறுவனம், 46,000 க்கும் மேற்பட்ட சைபர்டிரக் மின்சார வாகனங்களை (Electric Vehicles) திரும்பப் பெறும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
வாகனங்களின் வெளிப்புற உதிரி பாகம் பிரிந்து விழும் அபாயம் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த டெஸ்லா சைபர்டிரக் (Tesla Cybertruck) மாடல் அறிமுகமானதில் இருந்து இது எட்டாவது மற்றும் மிகப்பெரிய திரும்பப் பெறும் நடவடிக்கையாகும்.
கேண்ட் ரயில் குறைபாடு
"கேண்ட் ரயில்" எனப்படும் வாகனத்தின் வெளிப்புற ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உதிரி பாகம் வாகனத்திலிருந்து பிரிந்து விழும் பிரச்சினைக்காக இந்த திரும்ப பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தில் (NHTSA) தாக்கல் செய்யப்பட்ட தகவல்களின்படி, சுமார் 150 வாடிக்கையாளரின் புகார்களைப் பெற்ற பிறகு, டெஸ்லா நிறுவனம் இந்த பிரச்சினையை ஜனவரி மாதத்தில் விசாரிக்கத் தொடங்கியது.
மேலும், பிரிந்து விழும் உதிரி பாகம் சாலையில் ஆபத்தை ஏற்படுத்தி, வாகன விபத்து ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று NHTSA எச்சரித்தது.
ஏற்கனவே விற்பனை குறைந்து வரும் நிலையில் மற்றும் அதிகரித்து வரும் விமர்சனங்களை எதிர்கொள்ளும் டெஸ்லா நிறுவனத்திற்கு சவாலான காலகட்டத்தில் இந்த திரும்ப பெறும் நடவடிக்கை வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |