அமெரிக்காவில் கடும் முட்டை தட்டுப்பாடு: ஐரோப்பாவில் அவசரத் தேடல்!
பின்லாந்து மறுப்பு தெரிவித்ததை அடுத்து லிதுனியாவிடல் அமெரிக்கா முட்டை ஏற்றுமதி தொடர்பாக அனுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் முட்டை தட்டுப்பாடு
அமெரிக்காவில் பரவிய கடுமையான பறவைக் காய்ச்சல், அந்நாட்டை வரலாறு காணாத முட்டை தட்டுப்பாட்டில் தள்ளியுள்ளது.
அத்தியாவசிய சமையல் பொருட்களில் ஒன்றான முட்டை, தற்போது அமெரிக்காவில் ஆடம்பர பொருளாக மாறியுள்ளது.
இந்த நெருக்கடியைத் தணிக்க, அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளை நோக்கி முட்டைத் தேடலில் இறங்கியுள்ளது. அதன் ஒருப்பகுதியாக சமீபத்தில் லிதுவேனியாவையும் அமெரிக்கா அணுகியுள்ளது.
முட்டை தர மறுத்த நாடுகள்
உள்நாட்டுத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, அமெரிக்கா பல நாடுகளைத் தொடர்பு கொண்டது.
டேனிஷ் பத்திரிகையான அக்ரிவாட்ச் அறிக்கையின்படி, பின்லாந்து, டென்மார்க், ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளை ஏற்கனவே அமெரிக்கா அணுகியுள்ளது.
ஆனால் பின்லாந்து முட்டை ஏற்றுமதி செய்ய மறுப்பு தெரிவித்தது.
இதனை டொனால்ட் டிரம்பின் தூதரக அணுகுமுறையின் குறைபாடுகள்" என பலரும் கேலி செய்தனர்.
லிதுவேனியா உதவிக்கரம் நீட்டுமா?
தற்போது லிதுவேனிய செய்தி நிறுவனமான எல்.ஆர்.டி அறிக்கையின்படி, அமெரிக்கா சிறிய ஐரோப்பிய நாடான லிதுவேனியாவை உதவிக்காக அணுகியுள்ளது.
லிதுவேனியன் கோழி வளர்ப்பு சங்கத்தின் தலைவர் கைடிஸ் கவுசோனாஸ், வார்சாவில் உள்ள அமெரிக்க தூதரகம் முட்டை ஏற்றுமதி சாத்தியம் குறித்து தகவல் கேட்டு, லிதுவேனிய நிறுவனங்களின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை உறுதிப்படுத்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |