கொத்தாக 500 பேர்களை பலிவாங்கிய இஸ்ரேல் தாக்குதலுக்கு ட்ரம்ப் ஆதரவு: வெள்ளை மாளிகை தகவல்
காஸாவில் இஸ்ரேலின் வான் மற்றும் தரைவழி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முழுமையாக ஆதரிப்பதாக வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் ஆதரிப்பதாக
நடந்த தாக்குதல்களுக்கு முழு பொறுப்பும் ஹமாஸ் படைகளே எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஜனாதிபதி ட்ரம்ப் இஸ்ரேல் மற்றும் IDF-ஐ முழுமையாக ஆதரிப்பதாக குறிப்பிட்டுள்ள லீவிட், சமீபத்திய நாட்களில் இஸ்ரேல் முன்னெடுத்த நடவடிக்கைகளையும் ட்ரம்ப் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.
காஸா போர்நிறுத்தத்தை மீட்டெடுக்க ஜனாதிபதி ட்ரம்ப் முயற்சிக்கிறாரா என்று கேள்விக்கு பதிலளித்துள்ள லீவிட் இஸ்ரேலின் நடவடிக்கைகளை அவர் ஆதரிப்பதாகவே குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்காவிட்டால், அவர்கள் மிக மோசமான விலையை அளிக்க வேண்டியிருக்கும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் ஹமாஸிடம் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார் என்றே லீவிட் தெரிவித்துள்ளார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, ஹமாஸ் உயிர்களுடன் ஊடகங்களில் விளையாடுவதை தெரிவு செய்துள்ளது என்றார். அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் படைகளின் தவறுதான் இந்த நிலைமைக்கு முழுமையான காரணம் என லீவிட் தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தத்தை மீறியது
மேலும், ஹமாஸ் படைகளால் பிடிக்கப்பட்ட அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்று ட்ரம்ப் விரும்புகிறார் என்றும் அவர் கூறினார். காஸா மீது இஸ்ரேல் இராணுவம் திடீரென்று முன்னெடுத்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 504 என்றே தெரிய வந்துள்ளது.
இதில் கொல்லப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை 190 கடந்துள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு திடீரென்று தாக்குதலை முன்னெடுத்த இஸ்ரேல், ஜனவரி 19ம் திகதி ஒப்புக்கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது.
அதேவேளை, வெறும் அரசியல் காரணங்களுக்காக மட்டுமே காஸா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக இஸ்ரேலின் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பணயக்கைதிகளை மீட்கும் எந்த நடவடிக்கையும் நெதன்யாகு அரசாங்கம் இதுவரை முன்னெடுத்தது இல்லை என்றும் பாதிக்கப்பட்ட இஸ்ரேல் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |