இந்தியாவில் அறிமுகமாகும் டெஸ்லா வாகனங்கள்... விலை உள்ளிட்ட தகவல் வெளியானது
ஐரோப்பிய நாடுகளில் கடுமையான விற்பனை சரிவுகளுக்கு மத்தியில், டெஸ்லா இறுதியாக இந்திய சந்தையில் நுழைகிறது. அதன் முதல் விற்பனைக் காட்சியகம் ஜூலை மாதம் மும்பையில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவிற்கு இறக்குமதி
உலகின் மூன்றாவது பெரிய கார் சந்தையான இந்தியாவில் நுழைவதை நோக்கமாகக் கொண்ட எலோன் மஸ்க்கின் மின்சார வாகன (EV) நிறுவனத்திற்கு இது ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஐரோப்பா மற்றும் சீனாவில் டெஸ்லா விற்பனை கடுமையான சரிவை எதிர்கொண்டு வருகிறது. இந்தியாவில் இரண்டாவது விற்பனைக் காட்சியகம் விரைவில் டெல்லியில் திறக்கப்பட வாய்ப்புள்ளது.
டெஸ்லா நிறுவனம் ஏற்கனவே அதன் முதல் தொகுதி மாடல் Y மின்சார SUVகளை, அதனுடன் தொடர்புடைய கூறுகளையும் சேர்த்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது.
இவற்றில் சூப்பர்சார்ஜர் யூனிட்டுகள், உதிரி பாகங்கள், பிராண்டட் பொருட்கள் மற்றும் வாகன பாகங்கள் உள்ளிட்டவை அமெரிக்கா, சீனா மற்றும் நெதர்லாந்தில் இருந்து அனுப்பப்படும்.
ரூ.21 லட்சம் இறக்குமதி வரி
தற்போது உலகிலேயே அதிகம் விற்பனையாகும் மின்சார வாகனமான மாடல் Y, டெஸ்லாவின் ஷாங்காய் தொழிற்சாலையிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்படுகிறது. ஐந்து rear-wheel drive யூனிட்டுகள் மும்பைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன, ஒவ்வொன்றும் சுமார் ரூ.27.7 லட்சம் ($31,988) மதிப்புடையவை.
ஆனால், 40,000 டொலருக்கும் குறைவான விலையில் முழுமையாக தயாரிக்கப்பட்ட இறக்குமதிகளுக்கு இந்தியா 70 சதவீத வரி விதித்திருப்பதாலும், பிற கட்டணங்களாலும், கார்கள் ஒவ்வொன்றும் ரூ.21 லட்சத்திற்கும் அதிகமான இறக்குமதி வரிகளை எதிர்கொள்ள வேண்டும்.
மேலும், இந்தியாவில் வரி மற்றும் காப்பீடு தவிர டெஸ்லா மொடல் Y விலை 56,000 டொலருக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவை ஒப்பிடுகையில் அங்கு டெஸ்லா மொடல் Y காட்சியக விலை 44,990 டொலர்.
ஊக்கத்தொகைக்குப் பிறகு 37,490 டொலராக விற்பனை செய்யப்படுகிறது. பெரும்பாலான இந்திய நுகர்வோர் விலை நிர்ணயம் குறித்து மிகுந்த அக்கறை கொண்டவர்களாக இருப்பதால், இந்த அதிக விலை நிர்ணயம் இந்தியாவில் டெஸ்லா வாகனங்களுக்கு ஒரு சவாலாக இருக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |