டெஸ்லா காரை திறக்க கையில் சிறிய சிப்பை பொருத்தும் உரிமையாளர்! வைரலாகும் வீடியோ

Viral Video United States of America Tesla
By Ragavan Aug 23, 2022 07:15 AM GMT
Report

டெஸ்லா காரின் உரிமையாளர் ஒருவர் தனது வாகனத்தைத் திறக்க, சிறிய சிப்பை கையில் பொருத்திக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இனி அவர் தனது டெஸ்லா காரை திறக்க தனியாக ஒரு சாதனத்தை வைத்திருக்க தேவை இல்லை.

அமெரிக்காவில் டெஸ்லா உரிமையாளரான பிராண்டன் டலாலி (Brandon Dalaly), தனது கார் கதவை திறக்க, வலது கையில் சிறிய காண்டாக்ட்லெஸ் சிப் ஒன்றை பொருத்தியுள்ளார். இப்போது அவர் தனது காரைத் திறக்க சிப் பொருத்தப்பட்ட கையை பயன்படுத்தினால் போதும்.

டலாலி தனது கையில் விவோகீ அபெக்ஸ் சிப்பைப் (VivoKey Apex chip) பொருத்திக்கொள்வதைக் காட்டும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் தனது டெஸ்லா காரை வெறும் கைகளால் அசைத்து திறந்தும் காட்டியுள்ளார். அந்த வீடியோ பதிவில், இறுதியாக எனது ஃபோன் சாவி பிரச்சனைகளை என் கைகளைக்கொண்டே முடிவுக்கு கொண்டுவந்துவிட்டேன் என்று எழுதியுள்ளார்.

டெஸ்லா காரை திறக்க கையில் சிறிய சிப்பை பொருத்தும் உரிமையாளர்! வைரலாகும் வீடியோ | Tesla Owner Implant Tiny Chip In Hands Viral Video

இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து இணையத்தில் வைரலாகிவருகிறது. பலரும் இதனைப் பார்த்துவிட்டு கலவையான கமெண்டுகளை செய்து வருகின்றனர்.

நியூயார்க் போஸ்ட் செய்தியின்படி , VivoKey Apex என்ற சிப் மூலம் இந்த வினோதமான செயல் சாத்தியமானது. இது நியர்-ஃபீல்ட் கம்யூனிகேஷன் (NFC) நெறிமுறை என்று அழைக்கப்படும் அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது, இது Apple Pay மற்றும் ஹோட்டல்களில் keyless entry போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு தொழில்முறை துளைப்பவர் மூலம் 400 அமெரிக்க டொலர் செலவில் தனது வலது கையில் சிப்பை பொருத்தியதாக டலாலி கூறினார். அதுமட்டுமின்றி, இந்த சிப் பொதுமக்களுக்கு வெளியிடப்படுவதற்கு முன்பு சோதனையில் ஈடுபட்டுள்ள 100 பேர் கொண்ட பீட்டா குழுவின் ஒரு பகுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

தொழில்நுட்ப துறையில் பணிபுரியும் டலாலி, தனது இடது கையில் ஏற்கனவே மற்றொரு சிறிய சிப் வைத்திருப்பதாக கூறினார், அது தனது கொரோனா வைரஸ் தடுப்பூசி அட்டை, அவரது வீட்டின் சாவி, அவரது தொடர்பு அட்டை மற்றும் பிற தகவல்களைச் சேமிக்கிறது என்றார்.

மேலும், இடது கையில் தனது வீட்டுச் சாவியும், வலது கையில் கார் சாவியும் இருக்க வேண்டும் என்பதே முழு எண்ணமாக இருந்தது என்றார்.

டெஸ்லா காரை திறக்க கையில் சிறிய சிப்பை பொருத்தும் உரிமையாளர்! வைரலாகும் வீடியோ | Tesla Owner Implant Tiny Chip In Hands Viral Video

மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US