சிறிய தொழில்நுட்ப கோளாறு., திரும்ப பெறப்படும் 16.80 லட்சம் Tesla கார்கள்.!
முன்னணி மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா (Tesla) ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
சிறிய தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 16.80 லட்சம் Tesla கார்கள் திரும்பப் பெறப்படுவதாக சீன சந்தை ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
சாப்ட்வேர் மூலம் பிழை சரி செய்யப்படும் என டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.
காரின் டிரங்க் லாக்கில் பல குறைபாடுகளை கண்டறிந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயணத்தின் போது காரின் டிரங்க் கதவு தானாகவே திறக்கும் அபாயம் உள்ளது. மென்பொருளை அப்டேட் செய்து பிழையை இலவசமாக சரி செய்து தருவதாக கூறியுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட Model S மற்றும் Model X உள்ளிட்ட உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட Model 3 மற்றும் Model Y கார்களில் இந்த சிக்கல் கண்டறியப்பட்டுள்ளது என்று திரும்பப்பெறுதல் அறிவிப்புகளில் தெரியவந்துள்ளது.
அக்டோபர் 15, 2020 முதல் ஜூலை 17, 2024 வரை தயாரிக்கப்பட்ட கார்களுக்கு மென்பொருள் புதுப்பிப்பு தேவைப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெஸ்லாவிற்கு சீனா ஒரு முக்கிய சந்தை. விற்பனையுடன், கார்களும் அங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. டெஸ்லா நிறுவனம் சீன EV உற்பத்தியாளர்களிடமிருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது.
விலைக் குறைப்பு மற்றும் குறைந்த வட்டி நிதியுதவி இருந்தபோதிலும் விற்பனை சரிந்துவருகிறது. இதன் விளைவாக, நிறுவனம் இரண்டாவது காலாண்டில் நிகர வருமானத்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை அறிவித்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Tesla cars, tesla recalls 16.80 lakh cars in china, Tesla China Market