எனது மகனை மன்னித்துவிடுங்கள்: கெஞ்சும் டெக்சாஸ் கொலைகாரனின் தாயார்
டெக்சாஸ் பாடசாலைக்குள் புகுந்து மாணவர்கள் உள்ளிட்ட 21 பேர்களை கண்மூடித்தனமாக கொன்று தள்ளிய கொலைகாரனை மன்னிக்க வேண்டும் என அவரது தாயார் கெஞ்சியுள்ளார்.
கண்ணீர் வழிய பேசிய அட்ரியானா ரெய்ஸ், தமது மகனுக்காக கெஞ்சியுள்ளார். குறித்த படுகொலை தொடர்பில் அவனுக்கான காரணங்கள் இருக்கலாம், அவனை மன்னிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
தனது மகன் என்ன திட்டத்துடன் படுகொலையை முன்னெடுத்தார் என தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ள அட்ரியானா ரெய்ஸ், அவனுக்கான காரணங்கள் இருக்கலாம், அவனை தவறாக விதிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
அப்பாவி பிள்ளைகளின் மரணத்திற்கு காரணமான தமது மகனையும், தம்மையும் மன்னிக்க வேண்டும் என மீண்டும் கோரிய அவர், தனிப்பட்ட காரணங்கள் இருந்திருக்கும் அவனுக்கு என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் என்ன காரணம் அது என எழுப்பிய கேள்விக்கு, அவர் பதில் தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார். சம்பவத்தன்று அட்ரியானா ரெய்ஸின் தாயாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, குடியிருப்பை விட்டு வெளியேறிய சால்வடார் ராமோஸ்,
நேராக ராப் துவக்கப்பள்ளிக்குள் புகுந்து நான்காவது வகுப்பு மாணவர்கள் 19 பேர் மற்றும் இரு ஆசிரியர்கள் என 21 பேர்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளதுடன், கண்மூடித்தமான தாக்குதலில் 17 பேர் காயமடையவும் காரணமானார்.
ஒட்டுமொத்த அமெரிக்காவையும் உலுக்கிய சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த ராமோஸின் தாயார் அட்ரியானா ரெய்ஸ், தமது மகன் ஒருபோதும் வன்முறையாளன் அல்ல என குறிப்பிட்டிருந்தார்.
நடந்த சம்பவங்கள் தமக்கு அதிர்ச்சியை தருவதாக குறிப்பிட்டுள்ள அட்ரியானா ரெய்ஸ், அந்தக் குடும்பங்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். அந்த அப்பாவி குழந்தைகளுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன் என மட்டும் தெரிவித்திருந்தார்.
மட்டுமின்றி, தனது மகனுக்கு அதிக நண்பர்கள் இல்லை என்றும் அவர் ஒப்புக்கொண்டார். இதே கருத்தையே ராமோஸின் தந்தையும் தெரிவித்துள்ளார். தமது மகன் இவ்வாறான கொடுஞ்செயலை முன்னெடுப்பார் என தாம் ஒருபோதும் கருதியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பத்தினரும் தம்மை மன்னிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.