அமெரிக்காவில் ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 15 வயது பள்ளி மாணவர்: டெக்சாஸில் அதிர்ச்சி
அமெரிக்காவில் ஆசிரியர் ஒருவர் மீது மாணவன் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியில் துப்பாக்கிச் சூடு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பல்வெர்டே(Bulverde) நகரில் உள்ள ஹில் கன்ட்ரி காலேஜ் பிரிபரேட்டரி உயர்நிலைப் பள்ளியில் 15 வயது பள்ளி மாணவன் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவன் பெண் ஆசிரியர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு பின்னர் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட உயிரிழந்து இருப்பதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பள்ளி தொடங்கிய சிறிது நேரத்திலேயே இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

மாணவனின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண் ஆசிரியர் உடனடியாக அருகிலுள்ள சான் ஆண்டோனியோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆசிரியரின் தற்போதைய உடல்நிலை குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, மாணவர்கள் பத்திரமாக அருகே உள்ள நடுநிலை பள்ளிக்கு மாற்றப்பட்டு பின்னர் பெற்றோர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கான காரணம் குறித்து புலனாய்வுத் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |