சிறுவன் உட்பட ஐந்து அண்டை வீட்டாரைக் கொன்ற நபர்: பொலிசாரிடம் சிக்கியது எப்படி
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 8 வயது சிறுவன், அவனது தாயார் உட்பட ஐந்து அண்டை வீட்டாரைக் கொன்ற நபரை நான்கு நாட்களுக்கு பின்னர் பொலிசார் கைது செய்துள்ளனர்.
சலவைக் குவியலுக்கு அடியில்
குறித்த கைது நடவடிக்கை தொடர்பில் பொலிசார் தெரிவிக்கையில், குடியிருப்பு ஒன்றில் சலவைக் குவியலுக்கு அடியில் அந்த நபர் மறைந்திருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
Image: elheraldo
38 வயதான பிரான்சிஸ்கோ ஒரோபெசா பிரச்சனை ஏதுமின்றி, பொலிசாரிடம் சரணடைந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு AR-15 ரக துப்பாக்கியுடன் அண்டை வீட்டுக்கு சென்று மொத்த பேர்களையும் சுட்டுக் கொன்றுள்ளார் பிரான்சிஸ்கோ ஒரோபெசா.
சம்பவத்தின் போது ஒரோபெசா துப்பாக்கி ஒன்றால் சுட்டு சத்தம் எழுப்பியபடி இருந்துள்ளார். இந்த சத்தம் அவரது அண்டை வீட்டில் தூக்கத்தில் இருந்து பிஞ்சு குழந்தையை தொல்லை செய்துள்ளது.
இதனால் அவரிடம் சுடுவதை நிறுத்த வேண்டும் என கேட்டுள்ளனர். ஆனால், ஒரோபெசா அந்த குடியிருப்பில் இருந்த அனைவரையும் சுட்டுக் கொன்றுள்ளார். தற்போது கைதான ஒரோபெசா மீது ஐந்து கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதாக சான் ஜசிண்டோ கவுண்டி ஷெரிப் கிரெக் கேப்பர்ஸ் தெரிவித்துள்ளார்.
Image: Facebook
அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும், ஏன் என்றால் ஒரோபெசா கைது செய்யப்பட்டுள்ளான் என குறிப்பிட்டுள்ளார் ஷெரிப். ஒரோபெசாவை தேடும் பணியில் சுமார் 250 பேர்கள் களமிறங்கியிருந்தனர்.
நான்கு முறை நாடு கடத்தப்பட்டவர்
அவர் கைதுக்கு உதவும் பொதுமக்களுக்கு 80,000 டொலர் வெகுமதியும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தான், ஒரோபெசா மறைந்திருக்கும் இடம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
மதியத்திற்கு மேல் சுமார் 5.15 மணியளவில் ரகசிய தகவல் கிடைக்கவும், சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் ஒரோபெசா பொலிசாரல் கைதாகியுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் ஒரோபெசா மெக்சிகோ நாட்டவர், 2009 முதல் 2016 வரை நான்கு முறை நாடு கடத்தப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
@AP
ஒரோபெசா கைதாக ரகசிய தகவல் அளித்தவரின் அடையாளம் வெளியிடப்படாது என பொலிசாட் உறுதி அளித்துள்ளனர். மேலும், ஒரோபெசா தொடர்பில் 200 ரகசிய தகவல்கள் தங்களுக்கு கிடைத்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.