முகத்தில் சுடப்பட்ட டெக்சாஸ் கொலைகாரனின் பாட்டிக்கு வாழ்நாள் துயரம்: வெளிவரும் தகவல்
டெக்சாஸ் கொலைகாரன் சால்வடார் ராமோஸ் பாடசாலைக்குள் புகுந்து மாணவர்களை படுகொலை செய்யும் முன்னர் தமது பாட்டியின் முகத்தில் துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்றிருந்தான்.
குறித்த தாக்குதலில் படுகாயமடைந்திருந்த 66 வயது செலியா கோன்சலஸ் பேசும் திறனை இழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தன்று கொலைகாரன் சால்வடார் ராமோஸ் முதலில் தமது துப்பாக்கியால் தாக்கியது இவரையே. முகத்திற்கு நேரே துப்பாக்கியால் சுட்ட நிலையில், குண்டு தாடையை தாக்கியதுடன், அவரது பற்கள் மொத்தம் நொறுங்கியது.
பேசும் திறனை தற்போது செலியா கோன்சலஸ் இழந்தாலும், காயத்தில் இருந்து குணமடைந்துள்ளார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், உறவினர்களிடம் அவர் தற்போது எழுத்து மூலமே உரையாடி வருகிறார்.
கோன்சலஸ் முகத்தில் சுட்டுவிட்டு, அவரது வாகனம் ஒன்றுடன் தப்பிய சால்வடார் ராமோஸ் ராப் துவக்கப்பள்ளிக்குள் புகுந்து மொத்தம் 77 நிமிடங்கள் துப்பாக்கியால் மாணவர்கள் மீது தாக்குதல் முன்னெடுத்துள்ளார்.
இதில் 19 மாணவர்கள் மற்றும் இரு ஆசிரியர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். ரமோஸ் தனது பாட்டியுடன் தொலைபேசி பில் தொடர்பாக சண்டையிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர், இதன் விளைவாக அவர் தனது வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தினார் என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், தமது திட்டம் தொடர்பில் 15 வயது ஜேர்மானிய பெண் ஒருவருடன் ராமோஸ் பகிர்ந்து கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது.
எவரொருவர் துப்பாக்கியால் தமது பாட்டியை தாக்கினாரோ அவனுடைய இருதயத்தில் தீமை உண்டு எனவும்,
ஆனால் அதையும் விட கொடியவர்களே பிஞ்சு பிள்ளைகள் மீது துப்பாக்கியால் தாக்குதல் முன்னெடுப்பார்கள் என டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட் தெரிவித்துள்ளார்.