அமெரிக்காவை உலுக்கிய டெக்சாஸ் துப்பாக்கிச்சூடு: 19 குழந்தைகளை கொன்றவனின் சடலம்., அடக்கம் செய்ய எதிர்ப்பு
டெக்சாஸ் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் உடல் அடக்கம் செய்யப்படாமல் ஒரு மாதம் இழுத்தடிக்கப்பட்டது.
உள்ளூர் இறுதிச் சடங்கு இல்லங்கள் ஏதும் அவனது உடலை எடுக்க மறுத்ததால், சடலம் பிணவறையிலேயே இருந்துள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், உவால்டேயில் உள்ள ஒரு பள்ளியில் 19 குழந்தைகள் உட்பட 22 பேரை படுகொலை செய்த துப்பாக்கிதாரியான சால்வடார் ராமோஸின் உடலை, இறுதிச் சடங்கு இல்லங்கள் எடுக்க மறுத்ததால், ஒரு மாத காலம் பிணவறையில் வைக்கப்பட்டது.
மே 24 அன்று 18 வயதான ராமோஸ் பள்ளிக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 19 மாணவர்களும் இரண்டு ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர். இது அமெரிக்க வரலாற்றில் மிகக் கொடூரமான வெகுஜன துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் ஒன்றாக மாறியது.
இந்த சம்பவத்தில், வகுப்பறையை அத்துமீறி நுழைந்து ராமோஸை சுட்டுக் கொல்வதற்கு ஒரு மணி நேரம் காத்திருந்ததற்காக காவல்துறையும் விமர்சிக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பொறுப்பான மாவட்ட காவல்துறைத் தலைவர் பீட் அரேடோண்டோ பதவி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சம்பவத்தன்று பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட ராமோஸின் உடல், மே 27 அன்று பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மூன்றரை வாரங்களுக்குப் பிறகு தகனம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
DailyMail
கொலையாளியின் சடலத்தை உள்ளூர் இறுதிச் சடங்கு இல்லங்கள் அடக்கம் செய்ய கூட விரும்பாததாலும், ராமோஸின் குடும்பத்தில் பதற்றம் நிலவியதால் இந்த தாமதம் ஏற்பட்டதாக் கூறப்படுகிறது.
Hillcrest Memorial மற்றும் Rushing-Estes-Knowles ஆகிய உவால்டேயில் உள்ள இரண்டு இறுதிச் சடங்கு இல்லங்கள் அவனது உடலை எடுத்து அடக்கம் செய்ய மறுத்துவிட்டன.
இரத் சூழலில், யாரையும் வற்புறுத்தவும் முடியவில்லை, அவனது உடலை மூன்று வாரங்களுக்கு பிணவறையிலேயே சேமித்து வைக்க வேண்டியிருந்தது. அவனை என்ன செய்வது என்று தெரியவில்லை, அது ஒரு மன அழுத்தமான நேரம் என்று மரண விசாரணை அதிகாரி கூறினார்.
இறுதியில், உவால்டேவில் இருந்து 64 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிரிஸ்டல் சிட்டியில் உள்ள Castle Ridge இறுதிச் சடங்கு இல்லம் ராமோஸின் இறுதிச் சடங்குகளை கையாண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், அவர் 64 கிலோமீட்டர் தொலைவில் சான் அன்டோனியோவின் விளிம்பில் தான் தகனம் செய்யப்பட்டார், அதுவும் எப்போது என்பது தெரியவில்லை என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், புதன்கிழமையன்று அமெரிக்காவை உலுக்கிய இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பதிலளிக்கும் பொறுப்பில் இருந்த மாவட்ட காவல்துறைத் தலைவர் பீட் அரெடோண்டோ பணிநீக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் தெரிவிக்கின்றன.