டெக்ஸாஸில் மீண்டும் பரபரப்பு! துப்பாக்கி வைத்திருந்த பள்ளி மாணவன் கைது
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் பள்ளிக்கு துப்பையுடன் வந்த மாணவனை பொலிஸார் கைது செய்தனர்.
செவ்வாய்க்கிழமையன்று டெக்சாஸில் உவால்டே பகுதியில் உள்ள ராப் எலிமெண்டரி பள்ளியில் நடந்த பயங்கர துப்பாக்கிச்சூட்டில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் கொல்லப்பட்ட சமபவம் உலக அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தின் தாக்கமே இன்னும் குறையாத நிலையில், நேற்று (புதன்கிழமை) டெக்ஸாஸின் வேறொரு பகுதியில் பயங்கர துப்பாக்கியுடன் ஒரு உயர்நிலை பள்ளி மாணவனை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம், அப்பகுதியில் மின்றும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெக்ஸாஸின் ரிச்சர்ட்சன் பகுதியில், நேற்று (மே 25) காலை 11 மணிக்கு முன்பு, ஒரு நபர் பெர்க்னர் உயர்நிலைப் பள்ளியை (Berkner High School) நோக்கி துப்பாக்கியுடன் நடந்து செல்வதை பார்த்ததாக ரிச்சர்ட்சன் காவல்துறைக்கு அழைப்பு வந்தது.
ரிச்சர்ட்சன் பொலிஸார் அப்பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ரிச்சர்ட்சன் ISD-யுடன் இணைந்து தேடிய பிறகு, துப்பாக்கி வைத்திருந்ததாக கூறப்படும் சந்தேக நபர் பெர்க்னர் உயர்நிலைப் பள்ளி மாணவர் என அடையாளம் காண முடிந்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது.
அந்த மாணவரை உடனடியாக கண்டுபிடித்து சோதனை நடத்தப்பட்டது, ஆனால் அவரிடம் ஆயுதங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து சந்தேகமடைந்த பொலிஸார், 1551 ஈஸ்ட் ஸ்பிரிங் பள்ளத்தாக்கு சாலையின் வாகன நிறுத்துமிடத்தில் மாணவரின் வாகனத்தை கண்டுபிடித்தனர். அந்த காரை சோதனை செய்த அதிகாரிகள் "AK-47 பாணி பிஸ்டல் துப்பாக்கி" மற்றும் "பிரதி AR-15 பாணி Orbeez ரைபிள்" ஆகிய துப்பாக்கிகளை கண்டுபிடித்தனர்.
அதனைத் தொடர்ந்து, ஆயுதம் இல்லாத பாடசாலை வலயத்தில் சட்டவிரோதமாக ஆயுதங்களை எடுத்துச் சென்றதாக மாணவர் கைது செய்யப்பட்டு அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபரின் வயது காரணமாக அவரைப் பற்றிய வேறு தகவல்கள் எதுவும் வெளியிடப்பட மாட்டாது என ரிச்சர்ட்சன் பொலிஸார் தெரிவித்தனர்.