ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியான புகைப்படங்கள்: பெண்ணுக்கு 9,000 கோடி இழப்பீடு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் முன்னாள் காதலனால் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட வழக்கில் பெண்ணுக்கு 1.2 பில்லியன் டொலர் இழப்பீடு அளிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் காதலனுக்கு எதிராக
நீதிமன்ற தரவுகளில் DL என மட்டும் குறிப்பிடப்பட்டுள்ள தொடர்புடைய பெண் 2022ல் தமது முன்னாள் காதலனுக்கு எதிராக துன்புறுத்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
@Shutterstock
கதாலை முறித்துக்கொண்டமையால் பழி வாங்கும் நோக்கில் இருவரும் நெருக்கமாக இருந்த தருணத்தில் பதிவு செய்யப்பட்ட புகைப்படங்களை அந்த நபர் இணையத்தில் வெளியிட்டு தம்மை தலைகுனிய வைத்ததாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது அந்த வழக்கில் தொடர்புடைய பெண்ணுக்கு சாதகமாக நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்டவரின் சட்டத்தரணிகள் சார்பில் 100 மில்லியன் டொலர் இழப்பீடு கோரப்பட்டது.
ஆனால் 1.2 பில்லியன் டொலர் (ரூ.9,987 கோடி) இழப்பீடு அளிக்க வேண்டும் என குறிப்பிட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட மக்கள் அஞ்ச வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் பெருந்தொகை இழப்பீடாக விதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
தமது அந்தரங்க புகைப்படங்களை
நீதிமன்ற தரவுகளின் அடிப்படையில், 2016ல் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், தமது அந்தரங்க புகைப்படங்களை பெண்ணே அந்த நபரின் கோரிக்கையை ஏற்று பகிர்ந்துள்ளார்.
@Shutterstock
ஆனால் 2021ல் காதல் முறிந்த நிலையில், அந்த நபர் தொடர்புடைய புகைப்படங்களை சமூக ஊடகங்களிலும் ஆபாச பக்கங்களிலும் பதிவேற்றம் செய்துள்ளார். மட்டுமின்றி, தமது முன்னாள் காதலியை வேவு பார்க்கும் வகையில் குடியிருப்பினுள் பொருத்தப்பட்டிருந்த கமெரா உட்பட கட்டுப்படுத்தவும் அந்த நபர் உரிமை பெற்றிருந்தார்.
இதனிடையே, வாழ்நாள் முழுக்க அவஸ்தைப்பட நேரிடும் எனவும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த நிலையில், தொடர்புடைய பெண் அனுபவித்துவரும் மன வேதனைக்காக 200 டொலர் இழப்பீடும் இதுபோன்ற குற்றச்செயல்கள் இனி நடக்காதவாறு 1 பில்லியன் டொலர் இழப்பீடும் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |