நெதர்லாந்தில் சிறப்பாக இடம்பெற்ற தமிழ்ப் பாடநூல்களுக்கான ஆசிரியர் பயிலரங்கு (PHOTOS)
நெதர்லாந்தில் - அல்மேரா பிரதேசத்தில், அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின், மேம்படுத்தப்பட்ட தமிழ்ப் பாடநூல்களுக்கான ஆசிரியர் பயிலரங்கு நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது நெதர்லாந்து திரவள்ளுவர் தமிழ்க் கல்விக் கலை கழகத்தின் ஒழுங்கமைப்பில் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில், நெதர்லாந்திலுள்ள அனைத்து திருவள்ளுவர் தமிழ்க் கல்விக் கலைக் கழகத்தின் பாடசாலை ஆசிரியர்களும், நிர்வாகிகளும், கலந்து சிறப்பித்துள்ளனர்.
அத்துடன், இளையோர்களுக்கு பயனளிக்கும் வகையில், தேசியத்தலைவரின் சிந்தனைக்கமைவாக, இளையோர்களை உள்வாங்கும் நோக்குடன் 12ம் ஆண்டு வரை தமிழ்க்கல்வியை படித்து முடித்த இளையோர்களையும், இந்தப் பயிலரங்கில் இணைத்து நடத்தியமை பலராலும் பாராட்டக்கூடியதாக இருந்துள்ளது.
டென்மார்க் நாட்டிலிருந்து, ஆசிரியை மல்லீஸ்வரி ஆதவனும், சுவிஸ் நாட்டிலிருந்து அமுதா அன்பழகனும், நெதர்லாந்து திருவள்ளுவர் தமிழக் கல்விக் கலைக்கழகத்தின் கல்விப் பணிக்குழுவோடு இணைந்து, ஆசிரியர்களுக்கான பயிற்சியினை வழங்கியுள்ளனர்.
சிறப்பாக நடைபெற்ற இந்த பயிற்சிப்பட்டறையானது தமக்கு மிகவும் பயனுள்ளதாகவும், இதில் கலந்து கொண்டமை குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் கலந்துகொண்ட ஆசிரியர்களும், நிர்வாகிகளும் இளையோர்களும் தெரிவித்துள்ளனர்.






