பிரான்சில் 350 பயணிகளுடன் விபத்தில் சிக்கிய ரயில்: லொறி சாரதியை கைது செய்த பொலிஸார்
பிரான்ஸில் லொறி ஒன்றின் மீது ரயில் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
லொறி மீது ரயில் மோதி விபத்து
செவ்வாய்க்கிழமை பிரான்சின் வடக்கு பகுதியில் அதிவேக TGV ரயில் ஒன்று கனரக லொறி ஒன்றுடன் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
Bully les mines பகுதியில் உள்ளே ரயில்வே கிராசிங்கில் TGV ரயில் லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
In France, a high-speed train collided at a railroad crossing with a truck from a military convoy transporting equipment.
— Zlatti71 (@Zlatti_71) April 7, 2026
The train driver died, and 27 passengers were injured.
- SK pic.twitter.com/u4PO5MGkTQ
இந்த விபத்தின் போது TGV ரயிலில் கிட்டத்தட்ட 350 பேர் பயணம் செய்து கொண்டிருந்ததாக பிரான்சின் தேசிய ரயில்வே(SNCF) தெரிவித்துள்ளது.
ஒருவர் உயிரிழப்பு
இந்த விபத்தில் ரயில் சாரதி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் பிலிப் தபாரோட் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் இந்த விபத்தில் 27 பேர் வரை காயமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் அவர்களின் தற்போதைய உடல்நிலை குறித்த எந்தவொரு தகவலும் இன்னும் தெரியவரவில்லை.
விபத்தில் சிக்கிய லொறி இராணுவ தளவாடங்களை எடுத்துச் சென்றதாக அந்நாட்டு ஊடகம் Le Monde தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அதிகாரிகள் விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.
லொறி சாரதி இந்த விபத்தில் உயிர் தப்பிய நிலையில் அவரை கைது செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |