இந்த நாடுகளின் மக்கள் இனி விசா இன்றி தாய்லாந்து செல்லலாம்! வெளியான அறிவிப்பு
சீன சுற்றுலாப் பயணிகள் விசா இல்லாமல் தாய்லாந்து செல்லலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
தாய்லாந்து சுற்றுலா
ஆசிய நாடான தாய்லாந்துக்கு சீனாவில் இருந்து ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.
AFP
கடந்த 2019ஆம் ஆண்டு நிலவரப்படி தாய்லாந்துக்கு சுமார் 1 கோடிக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர்.
இவ்வாறாக சுற்றுலாத்துறையை சிறந்து விளங்கிய தாய்லாந்தில், கொரோனா தொற்றுக்கு பின் பல மடங்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது.
அதுமட்டுமின்றி அங்கு கடுமையான விசா கட்டுப்பாடுகள் உள்ளது இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
விசா விலக்கு
இதன் காரணமாக தாய்லாந்து அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வரும் 25ஆம் திகதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 29ஆம் திகதி வரை, சீனாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசா பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Wang Teng | Xinhua News Agency | Getty Images
அந்நாட்டின் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் இதனை அறிவித்தார். அத்துடன் கஜகஸ்தான் நாட்டு மக்களுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத் துறையை மீட்டெடுக்க தாய்லாந்து அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
BLOOMBERG
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |