தைப்பூச திருவிழாவில் தேர் திடீரென கவிழ்ந்ததால் அலறியடித்து ஓடிய பக்தர்கள்
தமிழக மாவட்டம் ஈரோட்டில் தைப்பூச திருவிழாவின்போது, திடீரென தேர் கவிழ்ந்ததால் பக்தர்கள் அலறியடித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகம் மட்டுமன்றி உலகமெங்கும் இன்று தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பொன்மலை ஆண்டவர் திருக்கோவிலில், ஒவ்வொரு தைப்பூச நாளிலும் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இன்று சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு, தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
தேர் கோவில் வீதியில் உலா வந்தபோது, சாலையோரம் இருந்த குழிக்குள் அதன் சக்கரங்கள் இறங்கியது. இதனால் வளைவில் திரும்பும்போது சரிந்து விபத்திற்குள்ளானது.
தேர் கவிழ்வதை கவனித்த பக்தர்கள் உடனடியாக அலறியடித்து ஓடினர். அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, பொக்லைன் இயந்திரம் மூலம் தேர் மீட்கப்பட்டது. இச்சம்பவம் பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |