சொத்து மதிப்பு ரூ 3452 கோடி... ஆசிய நாடொன்றின் பிரதமர் வெளியிட்ட தகவல்
ஆசிய நாடான தாய்லாந்தின் பிரதமர் தமது மொத்த சொத்து மதிப்பை அரசாங்க அமைப்பு ஒன்றிடம் வெளிப்படுத்தியுள்ளார்.
லண்டனில் சொத்துக்கள்
தாய்லாந்தின் பிரதமராக கடந்த செப்டம்பர் மாதம் பொறுப்புக்கு வந்தவர் Paetongtarn Shinawatra. இவரே தற்போது தமது மொத்த சொத்து மதிப்பு குறித்து வெளிப்படையாக அரசாங்க அமைப்பிடம் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.
மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ 3452 கோடி என குறிப்பிட்டுள்ள அவர், அதில் 217 உயர் ரக கைப்பைகள், மற்றும் 75 ஆடம்பர கடிகாரங்களும் குறிப்பிட்டுள்ளார். ரூ 2663 கோடி அளவுக்கு முதலீடு செய்துள்ளதாகவும், வங்கியில் வைப்பு நிதியாகவும் பணமாகவும் ரூ 245 கோடிக்கு கணக்கு சமர்ப்பித்துள்ளார்.
ஜப்பான் நாட்டில் சொந்தமாக நிலம் இருப்பதாகவும் லண்டனில் சொத்துக்கள் இருப்பதையும் Shinawatra குறிப்பிட்டுள்ளார். சுமார் 3.8 மில்லியன் பவுண்டுகள் மதிப்பில் 75 ஆடம்பர கடிகாரங்களும், 1.8 மில்லியன் பவுண்டுகள் மதிப்பில் 217 கைப்பைகளும் தம்மிடம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மிகப்பெரிய கோடீஸ்வரர்
அத்துடன் 1.6 மில்லியன் பவுண்டுகள் மதிப்பில் 23 வாகனங்களும் 1.2 மில்லியன் பவுண்டுகள் மதிப்பில் 205 ஜோடி காதணிகளும் 800,000 பவுண்டுகள் மதிப்பில் 67 தங்க வைர நகைகள் இருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் பிரதமர் Shinawatra வெளியிட்டுள்ள சொத்துப்பட்டியலானது தாய்லாந்து மக்களை பாதிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. Shinawatraவின் தந்தை Thaksin Shinawatra முன்னாள் தாய்லாந்து பிரதமர்.
ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் அவரது சொத்து மதிப்பு 1.7 பில்லியன் பவுண்டுகள் என்றே கூறப்படுகிறது. தாய்லாந்தின் 10வது மிகப்பெரிய கோடீஸ்வரர் Thaksin Shinawatra என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |