வெடித்த கண்ணிவெடி: கம்போடியா-தாய்லாந்து சண்டை நிறுத்த ஒப்பந்தம் நிறுத்திவைப்பு
கம்போடியா உடனான சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை தாய்லாந்து நிறுத்தியுள்ளது.
கம்போடியா-தாய்லாந்து மோதல்
தென்கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா-தாய்லாந்து சமீபத்திய கோடைக்காலத்தில் 5 நாட்கள் நீடித்த சண்டையில் பரஸ்பரம் மோதிக் கொண்டனர்.
அண்டை நாடுகளான இருவரும் இந்த மோதலை சமீபத்திய வரலாற்றின் மோசமான மோதல் என வரையறுத்து இருப்பதோடு, இதற்கான காரணத்தை இருநாடுகளும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இரு நாடுகளும் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 48 பேர் கொல்லப்பட்ட நிலையில் சுமார் 3,00,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்தனர்.

பின்னர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலையீட்டின் பேரில் மலேசியாவில் நடந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டனர்.
சண்டை நிறுத்த ஒப்பந்தம் நிறுத்திவைப்பு
இந்நிலையில் கம்போடியா உடனான சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை காலவரையின்றி நிறுத்தி வைப்பதாக தாய்லாந்து அறிவித்துள்ளது.
சமீபத்தில் கண்ணிவெடி வெடித்ததில் 4 தாய்லாந்து வீரர்கள் காயமடைந்ததே இதற்கான முக்கிய காரணமாக தாய்லாந்து தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |