கஞ்சாவுக்கு அனுமதி! ஆசியாவிலேயே முதல் நாடானது தாய்லாந்து
ஆசியாவிலேயே கஞ்சாவை பயன்படுத்த சட்டப்பூர்வ அனுமதி வழங்கிய முதல் நாடாக தாய்லாந்து மாறியுள்ளது.
தோட்டம், வர்த்தகம் மற்றும் மருத்துவ பயன்பாட்டிற்காக கஞ்சாவை வளர்க்கலாம் என தாய்லாந்து அறிவித்துள்ளது. ஆனால் பொது இடங்களில் கஞ்சாவை புகைப்பது குற்றம் எனவும், போதைப்பொருளாக அதனை பயன்படுத்துபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் உண்டு எனவும் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் கஞ்சாவை சட்டபூர்வமாக்கிய முதல் ஆசிய நாடானது தாய்லாந்து. இதுதொடர்பாக பொது சுகாதார அமைச்சர் Anutin Charnvirakul கூறுகையில், 'கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கியது பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக தான். போதைப்பொருள் பொழுதுபோக்கு பயன்பாடு இன்னும் சட்டவிரோதமானது தான்.
பணமதிப்பு நீக்கத்தின் கீழ், மரிஜுவானா (கஞ்சா) மற்றும் சணல் பொருட்களை வளர்ப்பது மற்றும் வர்த்தகம் செய்வது அல்லது நோய்களுக்கு சிகிச்சையளிக்க தாவரத்தின் பாகங்களைப் பயன்படுத்துவது குற்றமல்ல' என தெரிவித்துள்ளார்.
Photo Credit: Reuters
மேலும் பேசிய அவர், 'மருத்துவ நோக்கங்களுக்காக தாய்லாந்து கஞ்சா கொள்கைகளை ஊக்குவிக்கும். சுற்றுலாப் பயணிகள் மருத்துவ சிகிச்சைக்காக வந்தாலோ அல்லது உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளுக்காக வந்தாலோ தவறில்லை. ஆனால் கஞ்சா சட்டப்பூர்வமாக இருப்பதால் தாய்லாந்திற்கு வந்து கூட்டாக சேர்ந்து சுதந்திரமாக புகைக்கலாம் என்று நினைத்தால், அது தவறு. அத்தகைய சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்திற்கு வரவேற்கப்படுவதில்லை' என கூறியுள்ளார்.
Photo Credit: Pattarapong Chatpattarasill