தொலைபேசி உரையாடலால் பதவியை இழந்த பிரதமர்! நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை
தாய்லாந்து நீதிமன்றம் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
பதவி நீக்கம்
கம்போடியாவுக்கு இடையேயான எல்லைப் பதற்றத்தின்போது, தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா செனட் தலைவர் ஹன் சென் (Hun Sen) உடன் தொலைபேசியில் பேசினார்.
அந்த உரையாடலில், ஷினவத்ரா முன்னாள் பிரதமரான ஹன் சென்னை "மாமா" என்று அழைத்துள்ளார். அத்துடன் தாய்லாந்து இராணுவத்தின் மூத்த தளபதியை "எதிராளி" என்று விமர்சித்துள்ளார்.
இந்த தொலைபேசி உரையாடல் கசிந்து பெரும் சர்ச்சையாக வெடித்தது. அதன் எதிரொலியாக பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா (Paetongtarn Shinawatra) இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கம்போடியாவுடனான எல்லைப் பிரச்சனையை கையாண்டதற்காக நெறிமுறை முறைகேடாக நடந்து கொண்டதாக, அதிகாரமிக்க அரசியலமைப்பு நீதிமன்றத்தினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஒன்பது நீதிபதிகள் கொண்ட நீதிமன்றம், இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் எல்லை மோதலின்போது, ஹன் செனுடன் பேசியபோது ஒரு பிரதமருக்கு தேவையான நெறிமுறை தரங்களை ஷினவத்ரா தீவிரமாக மீறியதால் தீர்ப்பளித்துள்ளது.
ஐந்தாவது பிரதமர்
2008ஆம் ஆண்டுக்குப் பிறகு Thai நீதிபதிகளால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஐந்தாவது பிரதமர் ஷினவத்ரா ஆவார்.
இந்த பதவி நீக்கமானது தாய்லாந்து அரசியல் நிச்சயமற்ற தன்மையில் இருப்பதை காட்டியுள்ளது. மேலும் ஒரு திடீர் தேர்தலில் ராஜ்ஜியத்தை தள்ளுகிறது.
தாய்லாந்து, கம்போடியா எல்லைப் பிரச்சனை ஆயுத மோதல்களாக மாறியதால், இரு தரப்பிலும் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டனர் மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |