தாய்லாந்து பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து; 9 பேர் பலி, 115 பேர் காயம்
தாய்லாந்தில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் 115 பேர் காயமடைந்துள்ளனர்.
தெற்கு மாகாணமான நராதிவாட்டில் உள்ள சுங்கை கோலோக் நகரில் சனிக்கிழமை மதியம் இந்த சம்பவம் நடந்தது. கட்டிடத்தின் வெல்டிங் பணியின் போது இந்த வெடிப்பு ஏற்பட்டது.
தற்போது தீ கட்டுக்குள் வந்துள்ளது. கட்டிடம் கட்டப்பட்டு வரும் நிலையில், இரும்பு வெல்டிங் பணியின் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இதற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக நாரதிவாட் ஆளுநர் சனன் பொங்கக்சோர்ன் தெரிவித்தார்.
AFP
AP
வெடிப்பு 500 மீட்டர் (1,640 அடி) சுற்றளவில் சேதத்தை ஏற்படுத்தியதாக உள்ளூர் மக்கள் தொடர்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அனர்த்தத் தடுப்பு மற்றும் தணிப்புத் திணைக்களத்தின் அறிக்கையின்படி, அப்பகுதியில் உள்ள சுமார் 100 வீடுகள் சேதமடைந்துள்ளன.
AP
AP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Thailand fireworks warehouse explosion, thailand fireworks