தாய்லாந்தில் காணாமல் போன ஜேர்மன் தொழிலதிபர்: வீடு ஒன்றின் குளிர்சாதன பெட்டியில் சடலமாக கண்டுபிடிப்பு

Missing Persons Thailand Crime Germany Death
By Thiru Jul 11, 2023 11:33 PM GMT
Report

காணாமல் போன ஜேர்மன் தொழிலதிபரின் உடல் பாகங்கள் தாய்லாந்தில் உள்ள வீடு ஒன்றின் குளிர்சாத பெட்டியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன ஜேர்மன் தொழிலதிபர்

ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த 62 வயது ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஹான்ஸ்-பீட்டர் மேக்(Hans-Peter Mack) கடந்த ஜூலை 4ம் திகதி தொழில் தொடர்பான முக்கிய கூட்டத்திற்கு சென்ற பிறகு இருந்து வீட்டிற்கு திரும்பவில்லை என  தாய்லாந்து சேர்ந்த அவரது 24 வயது மனைவி பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

அவர் கடைசியாக பாட்டாயா பகுதியில் அவருடைய பென்ஸ் காரில் செல்வது சிலர் பார்த்துள்ளனர், ஹான்ஸ்-பீட்டர் மேக் காணாமல் போனதை தொடர்ந்து அவர் தொடர்பான தகவல் வழங்குபவர்களுக்கு 3 மில்லியன் பாட் வழங்கப்படும் என அவரது குடும்பத்தினர் அறிவித்து இருந்தனர்.

Hans-Peter Mack -ஹான்ஸ்-பீட்டர் மேக்

இதனிடையே அவருடைய கார் நோங் ப்ரூவில் உள்ள காண்டோமினியம் வாகன நிறுத்துமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. உள்ளூர் பொலிஸாரின் தகவலின் படி, காரின் உட்புறம் பிளீச்சிங் கொண்டு  தேய்த்து எடுக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸ் செய்தி தொடர்பாளர் வழங்கிய தகவலில், குற்றவாளிகள் ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர் என தெரிவித்து இருந்தார். அதே சமயம் ஹான்ஸ்-பீட்டர் மேக் வங்கி கணக்கில் இருந்து அதிக அளவிலான பணமும் திருடப்பட்டுள்ளது.

Hans-Peter Mack -ஹான்ஸ்-பீட்டர் மேக்pattaya news

தொழிலதிபர் ஹான்ஸ்-பீட்டர் மேக் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருந்து தன்னுடைய தாய்லாந்து மனைவியுடன் இணைந்து பட்டாயா-வில் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குளிர்சாத பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த உடல் பாகங்கள்

இந்நிலையில்  கிழக்கு தாய்லாந்து பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்த குளிர் உறைவிப்பானில் இருந்து காணாமல் போன 62 வயது ஜேர்மன் தொழிலதிபர் ஹான்ஸ்-பீட்டர் மேக்-கின் உடல் பாகங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

நோங் ப்ரூ நகர தலைமை காவலர் Tawee Kudthalaeng, திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் ஹான்ஸ்-பீட்டர் மேக் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

Hans-Peter Mack -ஹான்ஸ்-பீட்டர் மேக்AP

பீட்டர் மேக் உடல் கண்டுபிடிக்கப்பட்ட வீடு அவருடைய ஜேர்மன் நண்பர் ஒருவரால் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது, மேக் உடல் அடைக்கப்பட்டு இருந்த உறைவிப்பான் கருப்பு நிற லொறி ஒன்றில் கொண்டு செல்லப்பட்டு இந்த இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதை கண்காணிப்பு கமெராவில் பொலிஸார் கண்டுபிடித்ததை தொடர்ந்து இந்த உண்மை வெளிவந்துள்ளது.

Hans-Peter Mack -ஹான்ஸ்-பீட்டர் மேக்

ஹான்ஸ்-பீட்டர் மேக் கடத்தப்பட்டது மற்றும் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தற்போது பொலிஸார் 3 வெளிநாட்டவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US