இனி Full Day கொண்டாட்டம் தான்! தாய்லாந்தில் மதிய நேர மதுபான தடை நீக்கம்
தாய்லாந்து மதிய நேர மது விற்பனைக்கான தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளது.
மதிய நேர மதுபான தடை நீக்கம்
சுற்றுலா துறையின் வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில், பல தசாப்தங்களாக தாய்லாந்தில் கடைபிடிக்கப்பட்டு வந்த மதிய நேர மது விற்பனை தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
6 மாத கால சோதனை முயற்சியின் அடிப்படையில் இந்த திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது.

இதன்படி, உரிமம் பெற்ற மதுபான கடைகள் மற்றும் உணவகங்கள் ஆகியவை பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை பீர், ஒயின் போன்ற மதுபானங்களை விற்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் வேலை நேரத்தில் மது குடிப்பதை தடுப்பதற்காக 1972ம் ஆண்டு முதல் முறையாக இந்த மதிய நேர மதுபான தடையானது அமுல்படுத்தப்பட்டது.

சர்வதேச நாடுகளின் சுற்றுலா பயணிகளால் கொண்டாட்ட நகரமாக போற்றப்படும் தாய்லாந்தில், இந்த மதிய நேர மதுபான தடை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மத்தியில் சிரமத்தை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |