டிஜிட்டல் நாடோடிகளுக்காக புதிய விசா திட்டத்தை அறிவித்த பிரபல ஆசிய நாடு!
உலகெங்கிலும் உள்ள டிஜிட்டல் நாடோடிகள் (Digital Nomads), Freelancers மற்றும் தொலைதூர பணியாளர்களுக்காக புதிய விசா திட்டம் ஒன்றை ஆசிய நாடான தாய்லாந்து அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய திட்டத்தின் பெயர் "Destination Thailand Visa (DTV)" ஆகும்.
2024 ஜூலை 15-ஆம் திகதி தொடங்கப்பட்ட இந்த விசா திட்டம், சுற்றுலாப் பயணிகளை தாய்லாந்தில் 180 நாட்கள் வரை சட்டபூர்வமாக தங்கியிருந்து, வேலை செய்ய அனுமதிக்கிறது.
இந்த விசா, Digital Nomad-களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் எங்கு இருந்தாலும் வேலை செய்ய முடியும் என்பதால், தாய்லாந்தில் நீண்ட காலம் தங்கியும், வேலையைச் செய்வதற்கு இது உதவுகிறது.
இந்த விசா ஐந்து வருடங்களுக்கு செல்லுபடியாகும், மேலும் இதுவரை 47 தாய்லாந்து தூதரகங்கள் மற்றும் கான்சுலேட்டுகளால் 1,200 DTV விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
தாய்லாந்து, நீண்டகால சுற்றுலாப் பயணிகளை அடிக்கடி வரவேற்கிறது, ஆனால் அவர்களின் வேலைகள் சட்டத்திற்கு புறம்பாக இருப்பது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன.
DTV திட்டம், இந்த பிரச்சினைகளை தீர்த்து, டிஜிட்டல் நாடோடிகளுக்கு சட்டபூர்வமான தங்குமிடத்தை வழங்குகிறது, இது தாய்லாந்து குடிவரவு சட்டங்களுடன் ஒப்புமையாக உள்ளது.
டிஜிட்டல் நாடோடிகள் (Digital Nomads) என்பவர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உலகின் எந்த மூலையில் இருந்தும் வேலை செய்பவர்களைக் குறிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
digital nomad visa, Thailand announces new visa scheme for digital nomads, Thailand digital nomad visa